மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி மெரினா  கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர்.

 
தமிழகம்

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57-வது நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: முன்​னாள் முதல்​வர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை​யொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் சென்னை மெரி​னா கடற்கரையில் உள்ள அவரது நினை​விடத்​தில் நேற்று மலர் தூவி அஞ்​சலி செலுத் தினர்.

திமுக நிறு​வன​ரான மறைந்த முன்​னாள் முதல்​வர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் தமிழகம் முழு​வதும் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி திமுக சார்​பில் அதன் தலை​வரும் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி நடை​பெற்​றது.

          

சென்னை வாலாஜா சாலை சந்​திப்பு முதல் மெரினா கடற்​கரை​யில் உள்ள அண்ணா நினை​விடம் வரை 2 கிமீ தூரத்​துக்கு பேரணி நடை​பெற்​றது. இதில் திமுக​வின் மூத்த நிர்​வாகி​கள், அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​கள், எம்​.பி.க்​கள் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

அதன்​பின் அண்ணா நினை​விடத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மலர் ​வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தி​னார். திமுக சார்​பில் வீர​வணக்க முழக்​கங்​கள் எழுப்பி தொண்​டர்​களும் தங்​கள் அஞ்​சலியை செலுத்​தினர். தொடர்ந்து அருகே உள்ள முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் நினை​விடத்​தி​லும் மலர்​வளை​யம் வைத்து முதல்​வர் மரி​யாதை செலுத்​தி​னார்.

அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

பேரணி​யையொட்டி வாலாஜா சாலை முதல் மெரினா காம​ராஜர் சாலை வரை போக்​கு​வரத்து முழு​வது​மாக நிறுத்​தப்​பட்​டது. முதல்​வர் மு.க.ஸ்​டாலின் தனது எக்ஸ் வலை​தள பக்கத்​தில், “பேரறிஞர் அண்ணா, தமிழர்​களின் மனசாட்​சி. நினை​வு​நாளில் மட்​டுமல்ல, ஒவ்​வொரு நாளும் அண்​ணனை நினைக்​கும் நாள்​தான் எங்​களுக்​கு.

மொழித் திணிப்​பு, பண்​பாட்டு திணிப்பு, நிதி நெருக்​கடி என வஞ்​சகங்​களைச் செய்​து​கொண்​டு, துரோகிகளை எல்​லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்​தா​லும், பாஜக அரசின் ஆதிக்​கத்​துக்கு அண்ணாவின் தமிழகத்​தில் இடமில்லை. எத்​தனை ஆண்​டு​கள் ஆனாலும், தமிழகத்தை அண்ணாதான் ஆள்​கிறார்” என்று பதி​விட்​டிருந்​தார்.

இதேபோல் அதி​முக சார்பில் அதன் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் வந்து அண்ணா நினை​விடத்​தில் மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தி​னார். பின்னர் அவர் தனது எக்ஸ் தளத்​தில், “என்​றும் மக்​களுக்​கான திரா​விட வழி அரசி​யலின் துருவ நட்​சத்​திர​மாக விளங்​கும் நமது அண்​ணா​வின் நினைவு நாள் இன்​று.

அன்​றைய கொடுங்​கோல் காங்​கிரஸ் ஆட்​சியை வீழ்த்த, மக்​களுக்​கான கூட்​டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்​றி​தான், தமிழகத்​தின் அரசி​யலை அடுத்த நூற்​றாண்​டுக்கு கட்​டமைத்​தது. தமிழகத்தை தீயசக்​தி​யின் கோரப் பிடி​யில் இருந்து மீட்க வேண்​டியது அவர் பெயர் தாங்​கிய நமது அதி​முக இயக்​கத்​தின் வரலாற்றுக் கடமை​யாகும்.

மக்​கள் துணை​யோடு திமுக ஆட்​சிக்கு முடிவு கட்​டு​வோம். அண்​ணா​யிசம் போற்​றும் அதி​முக நல்​லாட்​சியை மீண்​டும் நிறு​வுவ​தே நாம் அவருக்கு செலுத்​தும் புகழஞ்​சலி​யாகும்” என்று பதி​விட்​டுள்​ளார்.

இதே​போல், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், வி.கே.சசிகலா உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் அண்ணா நினை​விடத்​தில் அஞ்​சலி செலுத்​தினர். தேமு​திக சார்​பில் கோயம்​பேட்​டில் உள்ள அக்​கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்தில் அண்ணா படத்​துக்கு பொருளாளர் எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தினர்.

SCROLL FOR NEXT