தமிழகம்

சென்னை | ரூ.342 கோடியில் மாமல்லன் நீர்த்தேக்கம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

செய்திப்பிரிவு

சென்னை: மாமல்​லபுரம் அரு​கில் ரூ.342.60 கோடி​யில் அமைய உள்ள மாமல்​லன் நீர்த்​தேக்​கத்​துக்கு அடிக்​கல் நாட்​டிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், முட்​டுக்​காட்​டில் கலைஞர் பன்​னாட்டு அரங்​கப்​பணி​களை பார்வையிட்டார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், நெம்​மேலி​யில் நீர்​வளத்​ துறை சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தின் திருப்​போரூர் மற்​றும் திருக்​கழுகுன்​றம் வட்​டங்​களில் பழைய மாமல்​லபுரம் சாலைக்​கும் கிழக்கு கடற்​கரை சாலைக்​கும் இடை​யில் கோவளம் உபவடிநிலப் பகு​தி​யில் 5,161 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.342.60 கோடி மதிப்​பில் புதிய குடிநீர் ​தேக்​கத்​துக்கு `மாமல்​லன்' என்று பெயர் சூட்​டி, நீர்த்தேக்கம் அமைக்​கும் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

தொடர்ந்​து, மாநிலம் முழு​வதும் நீர்​நிலைகளை புனரமைத்து பாது​காத்து சிறப்​பான முறை​யில் செய​லாற்​றிய தன்​னார்வ தொண்டு நிறு​வனங்​களுக்கு சிறந்த நீர் பாது​காத்​தல் விருதுகளை (Best Water Conservation Award) வழங்​கி​னார். தொடர்ந்து அவர் பேசி​ய​தாவது:

தினசரி 170 மில்​லியன் லிட்​டர்: சென்​னை​யின் வளர்ந்து வரும் பகு​தி​களுக்​காக அரசு செய்த முக்​கிய​மான பணி​யாக வரலாற்​றில், இந்த நிகழ்வு நினை​வு​கூரப்​படும். இந்த நீர்த்தேக்கம் ரூ.342.60 கோடி​யில், மானாமதி குழும 69 ஏரி​களில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்​காமல் இருக்க அமைக்​கப்​படு​கிறது.

திரு​விடந்தை முதல் கோகிலமேடு வரை 5,161 ஏக்​கரில், 1.65 டிஎம்சி கொள்​ளள​வில், 34 கிமீ நீள​முள்ள கரை மற்​றும் நீர் ஒழுங்​கி​யத்​துடன் அமைக்​கப்​படு​கிறது. இதன்​மூலம் தினசரி 170 மில்​லியன் லிட்​டர் குடிநீரை சோழிங்​க நல்​லூர், மேட​வாக்​கம், பள்​ளிக்​கரணை, சிறுசேரி, கேளம்​பாக்​கம், திருப்​போரூர், மாமல்​லபுரம் ஆகிய பகு​தி​களில் வசிக்​கும் 13 லட்​சம் மக்​களுக்கு வழங்க முடி​யும்.

பல்​ல​வர்​களில், ‘மாமல்​லன்’ என்று போற்​றப்​படு​கின்ற முதலாம் நரசிம்​மவர்ம பல்​ல​வன் உரு​வாக்​கிய மாமல்​லபுரம் அரு​கில், இந்த நீர்த்தேக்கம் அமைவ​தால், “மாமல்​லன் நீர்த்தேக்கம்” என்று இதற்கு பெயர் சூட்​டு​வது​தான் பொருத்​த​மாக இருக்​கும் என்று கூறினார்.

மேலும், முட்​டுக்​காடு பகு​தி​யில் கட்​டப்​பட்டு வரும், கலைஞர் பன்​னாட்டு மாநாடு மையத்​துக்கு கடந்​தாண்டு மே மாதம் முதல்​வர் ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார்.

தற்​போது பொருட்​காட்சி அரங்​கம், மாநாட்டு மண்​டபம், கலை​யரங்க பார்​வை​யாளர் மாடம் அமைக்​கும் பணி​கள் முடிந்து மேற்​கூரைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​தாண்டு நவம்​பர் மாதம் மக்​கள் பயன்​பாட்​டுக்கு இந்த அரங்​கம் கொண்டு வர திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் இப்​பணி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று பார்​வை​யிட்​டு, ஆய்வு செய்​தார்.

அப்​போது, பணி​களை தரமாக​வும், விரை​வாக​வும், குறித்த காலத்​துக்​குள் முடித்து பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என்று அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். நிகழ்​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தா.மோ.அன்​பரசன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், நீர்​வளத்​துறை செய​லா​ளர் ஜெ. ஜெய​காந்​தன், செங்​கல்​பட்​டு மாவட்ட ஆட்​சி​யர்​ தி.சினே​கா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT