குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினாவில் முப்படைகளின் முதல் கட்ட அணிவகுப்பு ஒத்திகை

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், போலீஸார், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், போலீஸார், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: குடியரசு தினத்தை முன்​னிட்டு மெரினாவில் முப்​படைகளில் முதல் கட்ட அணிவகுப்பு ஒத்​திகை நேற்று நடை​பெற்​றது. தமிழகத்​தில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்​கரை காம​ராஜர் சாலை​யில் உள்ள உழைப்​பாளர் சிலை அருகே நடை​பெற உள்​ளது. குடியரசு தினத்​தன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியை ஏற்​றவுள்​ளார்.

தொடர்ந்து அவர் முப்​படைகளின் அணிவகுப்பு மரி​யாதை மற்​றும் தமிழக அரசின் பல்​வேறு துறை சார்ந்த வாக​னங்​களின் அணிவகுப்பு மரி​யாதையை​யும் ஏற்​றுக் கொள்​கிறார். இதற்​கான முதற்​கட்ட அணிவகுப்பு ஒத்​திகை நேற்று காலை 7 மணி​யள​வில் உழைப்​பாளர் சிலை எதிரே காம​ராஜர் சாலை​யில் நடை​பெற்​றது.

இந்த ஒத்​திகை நிகழ்ச்​சி​யில் முப்​படைகளான ராணுவம், கடற்​படை, விமானப் படை, தமிழக காவல் துறை, தேசிய மாணவர் படை, மத்​திய தொழில் பாது​காப்​புப் படை, பிற மாநில போலீ​ஸார் உட்பட பல்​வேறு பிரிவு​களைச் சேர்ந்​தவர்​கள் முதல் கட்ட அணிவகுப்பு ஒத்​தி​கை​யில் நேற்று கலந்து கொண்​டனர்.

மேலும் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாணவி​களின் கலை நிகழ்ச்​சிகள் மற்​றும் ஆடல், பாடல் நிகழ்ச்​சிகளும் நடத்தி பார்க்​கப்​பட்​டது. இந்த ஒத்​தி​கையை முன்​னிட்டு நேற்று காலை 6 மணி​முதல் நிகழ்ச்சி முடி​யும் வரை மெரி​னா​வில் காந்தி சிலை முதல் போர் நினை​வுச் சின்​னம் வரை போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டிருந்​தது. அடுத்த கட்ட ஒத்​திகை ஜன. 21 மற்​றும் 23 ஆகிய தேதி​களில்​ இதே இடத்​தில்​ நடை​பெற உள்​ளது.

<div class="paragraphs"><p>சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், போலீஸார், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in