தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில், அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 
தமிழகம்

271-வது பிறந்தநாள் விழா: தீரன் சின்னமலை படத்துக்கு முதல்வர் மரியாதை

ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை​யின் பிறந்​த​நாளை​யொட்டி அவரது படத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மரி​யாதை செலுத்​தி​னார். ஆளுநர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் புகழாரம் சூட்​டி​யுள்​ளனர்.

விடு​தலை போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் 271-வது பிறந்​த​நாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி சென்​னை, அண்ணா அறி​வால​யத்​தில் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த தீரன் சின்​னமலை​யின்படத்​தக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, மருத்​துவ அணி தலை​வர் கனி​மொழி என்​விஎன் சோமு, மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​. இளங்கோ உடனிருந்​தனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, சேலத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் தீரன் சின்​னமலை​யின் படத்​துக்கு மரி​யாதை செலுத்​தி​னார். சங்​ககிரி​யில் உள்ள தீரன் சின்​னமலை நினை​விடத்​தில், சின்​னமலை​யின் உரு​வப்​படத்​துக்கு தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மரி​யாதை செலுத்​தி​னார்.

இதற்​கிடையே அரசி​யல் கட்சிகளின் தலை​வர்​கள் வெளி​யிட்ட செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: ஆங்​கிலேய கிழக்​கிந்​திய கம்​பெனியை எதிர்த்து 3 முறை போர் தொடுத்து வென்ற மாபெரும் வீரர் தீரன் சின்​னமலை, தமிழர்​களின் பெருமை அவர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: நேரடி​யாகப் போரிட்டு வெல்ல முடி​யாத ஆங்​கிலேய ஆதிக்​க​வா​தி​கள் சூழ்ச்​சி​யால்​தான் சின்​னமலையை வீழ்த்த முனைந்​தார்​கள். இன்​றோ, தமிழகத்​துக்​குள் நேரடி​யாக நுழைய முடி​யாத டெல்லி ஆதிக்​க​வா​தி​கள் 'தொகுதி மறு​வரையறை' எனும் சதித் திட்​டத்​தால் நம்மை அரசி​யல் வலிமையற்​றவர்​களாக்க முனைகிறார்​கள்.

அன்​று, சின்​னமலை​யைக் காட்​டிக் கொடுத்​தான் ஒரு துரோகி. இன்​றும் சில அடிமை​கள் தங்​கள் சுயநலத்​துக்​காக தமிழகத்​தின் எதிர்​காலத்​தையே ஆர்​எஸ்​எஸ் எஜமானர்​களின் காலடி​யில் அடகு வைக்​கின்​றனர். இந்த ஆதிக்​க​வா​தி​களை​யும், அடிமை​களை​யும் எதிர்த்து தமிழகம் போராடும், தமிழகம் வெல்​லும்

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஆங்​கிலேய ஏகா​திபத்​தி​யத்​துக்கு சிம்ம சொப்​பன​மாக திகழ்ந்த மாவீரர் தீரன். இன்​றைக்கு கர்​நாடக காங்​கிரஸ் அரசிடம் தமிழகத்​தின் நீரா​தார உரிமை​களை​யும், பாலியல் சார்​-களிடம் தமிழக பெண்​களின் பாது​காப்​பை​யும், போதை மாஃபி​யாக்​களிடம் இளைஞர்​களின் எதிர்​காலத்​தை​யும் அடகு வைத்​து​விட்​டது திமுக.

ஒவ்​வொரு தமிழரின் வாழ்​வை​யும் காக்க வேண்​டிய வரலாற்று போர்​களத்​தில், சின்​னமலை விதைத்த தீரத்​தோடு திமுகவை வீழ்த்​திட சூளுரைப்​போம்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ஆங்​கிலேயர் ஆட்​சிக்கு எதி​ராக இறுதி மூச்​சுவரை அசைக்க முடி​யாத உறு​தி​யுடன் போராடிய மாவீரர் தீரன் சின்​னமலை​யில் பிறந்த நாளை மரி​யாதை​யுடன் நினை​வு​கூர்​கிறோம்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: ஆங்​கிலேயர் ஆட்​சிக்கு எதி​ராக தன்​னலமின்றி போராடி, தமிழகத்​தின் மண்​ணுக்கு மரி​யாதை சேர்த்த மாவீரன் சின்​ன மலையின் புகழை போற்றுவோம்.

பாமக தலை​வர் அன்​புமணி: வெள்​ளை​யர்​களுக்கு எதி​ராக வீரத்​துடன் போரிட்ட தீரன் சின்​னமலை​யின் பிறந்​த​நாளில், அவரது தீரத்​தை​யும், தேசப்​பற்​றை​யும் போற்றி வணங்​கு​வோம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தான் பிறந்த மண்​ணின் விடு​தலைக்​காக​வும், நாட்டு மக்​களின் நலனுக்​காக​வும் தன் வாழ்​நாளை அர்ப்​பணித்த மாபெரும் வீரர் தீரன் சின்​னமலை​யை எந்​நாளும்​ போற்​றி வணங்​கிடு​வோம்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT