ஊட்டியில் குஷ்புவின் கைப்பையை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்

ஊட்டி தீட்டுக்கலில் குஷ்பு வந்த ஹெலிப்காப்டரையும் அவரது கைப்பையையும் சோதனையிட்ட பறக்கும் படையினர்.

ஊட்டி தீட்டுக்கலில் குஷ்பு வந்த ஹெலிப்காப்டரையும் அவரது கைப்பையையும் சோதனையிட்ட பறக்கும் படையினர்.

Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் ஊட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் பாஜக வேட்​பாளர் மு.​போஜ​ராஜனை ஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொள்ள பாஜக மாநில துணைத் தலை​வர் குஷ்பு நேற்று கோவை​யில் இருந்து ஹெலி​காப்​டர் மூலம் ஊட்டி வந்​தார்.

தீட்​டுக்​கல் ஹெலி​காப்​டர் தளத்​துக்கு வந்​ததும், ஹெலி​காப்​டர் மற்​றும் குஷ்புவின் கைப்​பையை பறக்​கும்​படை​யினர் சோதனை​யிட்​டனர்.

இதனை தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் குஷ்பு கூறிய​தாவது: 33 சதவீத இடஒதுக்​கீடு மசோதா என்​பது, நம் நாட்​டின் ஒவ்​வொரு பெண்​ணும் நீண்​ட​கால​மாக எதிர்​பார்த்​துக் காத்​திருந்த ஒரு கனவாகும். பெண்​களை வலு​வூட்​டு​வ​தில் பிரதமருக்கு உறு​தி​யான ஈடு​பாடு இல்​லா​விட்​டால், இது சாத்​தி​ய​மாகி​ இருக்​காது.

நம் நாட்​டில் உள்ள ஒவ்​வொரு பெண்​ணுக்​கும் கட்​டா​யம் அதி​காரமளிக்​கப்பட வேண்​டும் என்று அவர் உண்​மை​யாகவே நம்​பு​கி​றார். தொகுதி மறு​வரையறை என்​பது ஒட்​டுமொத்த நாட்​டுக்​கும் பொருந்​தக்​கூடிய ஒரு விஷய​மாகும்.

ஆனால், தொகுதி மறு​வரையறை என்​றால் என்ன என்​ப​தைப் படித்​துப் புரிந்​து​கொள்​ளாமலேயே, அதுகுறித்து அவசரப்​பட்​டுப் புகார் தெரிவிக்​கும் ஒரு முதல்​வர் தமி​ழ​கத்​தில் இருப்​பது துர​திர்​ஷ்ட​வச​மானது.

உங்​கள் தோல்வி​களிலிருந்து மக்​களின் கவனத்​தைத் திசை​திருப்ப தொகுதி மறுவரையறையை பயன்​படுத்த முயற்​சிக்​காதீர்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார். பின்​னர் மஞ்​சூர் பகு​தி​யில் பாஜக வேட்​பாளர் மு.​போஜ​ராஜனுக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்​.

<div class="paragraphs"><p>ஊட்டி தீட்டுக்கலில் குஷ்பு வந்த ஹெலிப்காப்டரையும் அவரது கைப்பையையும் சோதனையிட்ட பறக்கும் படையினர்.</p></div>
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு அலுவலர்: ஐகோர்ட் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in