தமிழகம்

கும்​பகோணம் ஆதி கும்​பேஸ்​வரர் கோயி​லில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி வழி​பாடு

செய்திப்பிரிவு

கும்​பகோணம்: நாட்​டின் 53-வது தலைமை நீதிப​தி​யாக சூரிய​காந்த் சர்மா நவ. 24-ம் தேதி பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், அவர் நேற்று கும்​பகோணம் ஆதி கும்​பேஸ்​வரர் கோயி​லில் வழி​பாடு நடத்த வந்​தார்.

கோயில் செயல் அலு​வலர் முரு​கன் மற்​றும் சிவாச்​சா​ரி​யார்​கள் பூரணகும்ப மரி​யாதை​யுடன் நீதிப​தியை வரவேற்​றனர். தொடர்ந்​து, யானை மங்​களத்​துக்கு நீதிபதி சூர்​ய​காந்த் சர்மா பழங்​கள் வழங்கி ஆசி பெற்​றார். பின்​னர், ஆதி கும்​பேஸ்​வரர் மற்​றும் மங்​களாம்​பிகை அம்​மன் சந்​நி​தி​களில் அவர் வழிபட்​டார்.

முன்​ன​தாக, நாச்​சி​யார்​கோ​வில் சீனி​வாச பெரு​மாள் கோயில், திரு​நாகேஸ்​வரம் ஒப்​பிலியப்​பன் கோயில், வேங்​க​டாஜலபதி சுவாமி கோயில் உள்​ளிட்ட கோயில்​களி​லும் தலைமை நீதிபதி சூரிய​காந்த் சர்மா வழிபட்​டார்.

SCROLL FOR NEXT