கோப்புப்படம்

 
தமிழகம்

தமிழகத்தில் கோழி இறைச்சி கடைகள் போராட்டம் வாபஸ்

செய்திப்பிரிவு

சென்னை: கறி கோழி உற்பத்தியாளர்கள், தீவன கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்ததால், நாளை (ஜூலை 31) முதல் நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனையாளர்களின் காலவரையற்ற போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் துரைராஜ், தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் கோழியை விற்பனைக்கு அனுப்பும்போது, தீவனங்களை வழங்குவதால், கோழியின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது.

எனவே, கோழியை விற்பனைக்கு அனுப்புவதற்கு 8 முதல் 12 மணி நேரம் முன்பிருந்து தீவன கட்டுப்பாடு அவசியம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 31 (நாளை) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்தி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.

இந்நிலையில், தீவன கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாக கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து, கோழி இறைச்சி விற்பனை நிறுத்த போராட்டம் கைவிடப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT