தமிழகம்

சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் ஏசி பழுது: ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்ல இருந்த விமானத்​தில் ஏசி இயங்​காத நிலை​யில், ஓடு​பாதை​யில் விமானத்தை நிறுத்​தி​விட்டு விமானி சென்​ற​தால் 4 மணி நேர​மாக பயணிகள் அவதிக்​குள்​ளாகினர்.

சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் 198 பயணி​களு​டன் நேற்று காலை 7.20 மணிக்கு புறப்​படத் தயா​ரானது. விமானம் ஓடு​பாதை​யில் ஓடு​வதற்கு தயா​ரான​போது, விமானத்​துக்​குள் ஏசி வேலை செய்​யாத​தால், பயணிகள் கூச்​சல் போட்​டனர்.

          

இதையடுத்து, விமானத்​தில் கோளாறு இருப்​ப​தாக கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​து​விட்டு விமானி கீழே இறங்​கிச் சென்​று​விட்​டார். விமானத்​தின் கதவு​கள் திறக்​கப்​பட்​டன.

சிறிது நேரத்​தில் விமானத்​தின் கோளாறு சரிசெய்​யப்​பட்​ட​தால், விமானம் புறப்​படும் என்று பயணிகள் எதிர்​பார்த்​தனர். ஆனால், நீண்ட நேர​மாகி​யும் விமானத்தை இயக்க விமானி வராத​தால், பயணிகள் விமானத்​துக்கு உள்​ளேயே தவித்​தனர்.

அப்​போது மீண்​டும் ஏசி நிறுத்​தப்​பட்​ட​தால், விமானத்​தின் திறந்​திருந்த கதவு​கள் வழி​யாக பயணிகள் கீழே இறங்க முயற்சி செய்​தனர். ஆனால், விமானத்​தில் லேடர் பொருத்​தப்​ப​டாத​தால் கீழே இறங்க முடிய​வில்​லை.

அதனால் பயணி​கள் விமானத்​துக்கு உள்​ளேயே கோஷமிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். விமானத்​தில் ஏசி மீண்​டும் இயங்க தொடங்​கி​னாலும், விமானி வராத​தால் 4 மணி நேரத்​துக்கு மேலாக விமானத்​துக்​குள்​ளேயே அமர்ந்​திருந்​தனர்.

ஒரு​கட்​டத்​தில் விமானத்​திலிருந்து கீழே குதித்​து​விடு​வோம் என்று பயணிகள் தெரி​வித்​தனர். அங்கு வந்த மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினர் பயணி​களை மிரட்டி விமானத்​துக்​குள் அனுப்​பினர். பின்​னர் விமானி வந்​ததும், பகல் 11.40 மணிக்கு விமானம் சிங்​கப்​பூருக்கு புறப்​பட்​டுச் சென்​றது.

நடந்த சம்​பவங்​களை பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதிவு செய்​து, இதுகுறித்து இந்​திய சிவில் விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சகம் விசா​ரணை மேற்​கொண்​டு, உரிய நடவடிக்​கைகள் எடுக்க வேண்​டும் தெரி​வித்​துள்​ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலை​யத்​தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT