தமிழகம்

மின்சார ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: மின்​சார ரயில்​களில் படிக்​கட்​டில் தொங்குதல், சாகச பயணத்​தில் ஈடு​படு​வோர் மீது ரயில்வே சட்​டத்​தின்​கீழ் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

சென்​னை​யில் சென்ட்​ரல் - அரக்​கோணம், கடற்​கரை - தாம்​பரம், செங்​கல்​பட்​டு, வேளச்​சேரி உள்பட பல்​வேறு வழித்​தடங்​களில் நாள்​தோறும் 650 மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் செய்​கின்​றனர்.

இந்த நிலை​யில், பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள், இளைஞர்​கள் சிலர் மிக ஆபத்​தான வகை​யில் மின்​சார ரயி​லின் படிக்​கட்​டு​கள் மற்​றும் ஜன்​னல் ஓரத்​தில் தொங்​கியபடி செல்​கின்​றனர். இதனால், தவறி விழுந்​தும், ரயில் பாதையை ஒட்​டி​யுள்ள கம்​பங்​களில் மோதி​யும் படு​கா​யம் அடைகின்​றனர். உயி​ரிழப்​பும் நேரிடு​கிறது.

இதை தடுக்க, ஆர்​பிஎஃப் போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​படும்​போ​தி​லும், இளைஞர்​கள் சாகசப் பயணம் மேற்​கொள்​வது தொடர்​கிறது. இந்​நிலை​யில், மின்​சார ரயில்​களில் ஆபத்​தான வகை​யில் சாகசம் செய்​வோர் மீது ரயில்வே சட்​டத்​தின்​கீழ் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: சென்னை புறநகர் மற்​றும் பறக்​கும் வழித்தட ரயில் சேவை​களில், இளைஞர்​கள், மாணவர்​கள் சிலர் பாது​காப்​பற்ற முறை​யில் பயணம் செய்​யும் போக்கு அதி​கரித்து வரு​வது ரயில்​வே​யின் கவனத்​துக்கு வந்​துள்​ளது.

சமீப​கால​மாக, ஓடும் ரயில்​களில் தொங்​கியபடி நடைமேடை​யில் சறுக்​கு​வது (skating-style stunts), ரயி​லில் இருந்து குதித்து சாகசம் செய்​வது, படிக்​கட்​டு​களில் தொங்​கியபடி பயணிப்​பது, பொது​மக்​களுக்கு இடையூறு விளை​விப்​பது மற்​றும் இவற்றை வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​வதற்​காக மொபைலில் வீடியோ பதிவு செய்​வது போன்ற சம்​பவங்​கள் அதி​க​மாக பதி​வாகின்​றன.

இந்த செயல்​கள் சம்​பந்​தப்​பட்ட தனி​நபர்​கள் மட்​டுமின்​றி, சக பயணி​களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்​கும். இத்​தகைய பொறுப்​பற்ற செயல்​பாடு​கள் மாணவர்​களின் எதிர்​காலத்தை பாதிப்​பதுடன், அவர்​களது கல்வி நிறு​வனங்​களுக்கு அவப்​பெயரை​யும், பெற்​றோருக்கு மிகுந்த கவலை​யை​யும் ஏற்​படுத்​துகின்​றன.

இதை கருத்​தில் கொண்​டு, பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்ய, கண்​காணிப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. படிக்​கட்டு பயணம், சாகசங்​கள் அல்​லது பாது​காப்​பற்ற செயல்​களில் ஈடு​படு​வோர் மீது ரயில்வே சட்​டத்​தின்​கீழ் பாரபட்​சமின்றி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

எனவே, உயிருக்கு ஆபத்​தான சாகசங்​களை தவிர்த்து அனைவரும் பாது​காப்​பான பயணத்தை மேற்​கொள்ள வேண்​டும். பாது​காப்பு தொடர்​பான உதவி​களுக்​கு, ரயில்வே உதவி எண் ‘139’-ஐ தொடர்பு கொள்​ளலாம் என்றனர்.

SCROLL FOR NEXT