சமூகநீதியை உயிர் கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி

சமூகநீதியை உயிர் கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: சமூகநீ​தியை உயிர்க் கொள்​கை​யாக மதித்​தவர் வி.பி.சிங் என அவரது நினைவு தினத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் புகழஞ்​சலி செலுத்​தி​யுள்​ளனர். மறைந்த முன்​னாள் பிரதமர் வி.பி.சிங்​கின் நினை​வு​தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்டி தலை​வர்​கள் விடுத்த செய்​தி: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: பதவி​களை துச்​ச​மாக நினைத்​து, சமூகநீ​தியை உயிர்க் கொள்​கை​யாக மதித்​தவர் வி.பி.சிங். பொருளா​தா​ரத்​தில் பின் தங்​கிய​வர்​கள், நீட் என வித​வித​மான வழிகளில் சமூகநீ​தியை குழிதோண்​டிப் புதைக்​கும் ஆட்​சி​யாளர்​கள் ஒன்​றி​யத்​தில் இருக்​கும்​போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்​னும் கூடு​தலாகவே மிஸ் செய்​கிறோம்.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: மண்​டல் கமிஷன் அறிக்​கையை நடை​முறைப்​படுத்தி கோடானு கோடி பிற்​படுத்​தப்​பட்ட மக்​களின் வாழ்​வில் இட ஒதுக்​கீட்​டின் மூலம் ஒளி​யேற்​றிய​வர் சமூகநீ​திக் காவலர் வி.பி.சிங். தமிழகத்​தை​யும், தமிழ் மக்​களை​யும் மனதார நேசித்​தவர். சென்​னை​யில் ஆளுயர சிலை வைத்து வி.பி.சிங்​-க்கு நம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெருமை சேர்த்​தார்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: முன்​னாள் பிரதமர் வி.பி.சிங், மண்​டல் கமிஷன் பரிந்​துரைகளை அமல்​படுத்​தி​யதன் மூலம்சமூகநீதிக்கு ஆற்​றிய பங்​களிப்பு வரலாற்​றுச் சிறப்​புமிக்​கது.

தமிழகத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிகப் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்​காக இட ஒதுக்​கீடு வேண்டி தொடர்ந்து போராட்​டங்​கள் நடத்​திட எனக்கு ஆக்​க​மும் ஊக்​க​மும் அளித்து பாராட்​டு​களை தெரி​வித்​தவர் வி.பி.சிங். சமூக நீதிக்​காக அவர் ஆற்​றிய பணி என்​றும் மறக்க முடி​யாதது.

பாமக தலை​வர் அன்​புமணி: சமூகநீ​தி​யில் வி.பி.சிங் கொண்​டிருந்த அக்​கறையை அனை​வர் மத்​தி​யிலும் கொண்டு சென்று பரப்ப உறு​தி​யேற்​கிறேன். அவரது துணை​யுடன் தமிழகத்​தில் சாதி​வாரி சர்​வே, அதனடிப்​படை​யில் அனைத்து சமூகங்​களுக்​கும் முழு​மை​யான இட ஒதுக்​கீடு ஆகிய​வற்றை வென்​றெடுக்​க வி.பி.சிங்​ நினை​வு நாளில்​ உறு​தியேற்​போம்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in