தமிழகம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் இந்த நிதியாண்டில் 150 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளத்தை புதுப்பிக்க இலக்கு

செய்திப்பிரிவு

சென்னை: இந்த நிதி​யாண்​டில், 150 கி.மீ. தூரத்​துக்கு ரயில் தண்​ட​வாளத்தை புதுப்​பிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரிவித்தனர்.

இதுகுறித்​து அவர்​கள் மேலும் கூறிய​தாவது: ரயில்​களை பாது​காப்​பாக இயக்க, வேகம் அதி​கரிப்​புக்கு ஏற்ப தண்​ட​வாளத்தின் தரம், பாலங்​களின் உறு​தித்​தன்மை அவசி​ய​மாகிறது.

அந்​த வகை​யில், கடந்த சில ஆண்​டு​களாக, ரயில்வே பாலங்​களை புதுப்​பிப்​பது, பழைய தண்​ட​வாளங்​களை நீக்கி புதி​ய​தாக அமைப்​பது ஆகிய பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

கடந்த நிதி​யாண்​டில், சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் மட்​டும் 141 கி.மீ. தொலை​வுக்கு தண்​ட​வாளங்​கள் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளன.

இது​போல 143 கி.மீ. தொலை​வுக்கு பழைய சிலீப்​பர்​கள் அகற்​றப்பட்டு, புதி​ய​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளன. இப்​பணி​களை விரைந்து மேற்​கொள்ள டி.ஆர்​.டி. எனப்​படும் டிராக் லேயிங் டிரேன் என்ற அதிநவீன இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

இந்த நிதி​யாண்​டில், மொத்​தம் 150 கி.மீ. தொலை​வுக்கு ரயில்வே தண்​ட​வாளத்தை புதுப்​பிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான பணி விரை​வில் தொடங்​க​வுள்​ளது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT