செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் அவர்களது தந்தையிடம் சம்மன் வழங்கிய திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர். படம்: க.ராதாகிருஷ்ணன்

 
தமிழகம்

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரம்: செந்தில் பாலாஜி, அவரது தம்பிக்கு சென்னை போலீஸார் சம்மன்

வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்னை/ கரூர்: தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேசிய விவ​காரத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆகிய இரு​வரும் நாளை விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் சம்​மன் அனுப்​பி​யுள்​ளனர். அவர்​கள் வெளி​நாடு தப்​பிச் செல்​வதை தடுக்க ‘லுக்​-அவுட்’ நோட்​டீஸும் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

தவெக ஆட்​சி​யைக் கவிழ்க்​கும் நோக்​கில் அக்​கட்சி எம்​எல்​ஏக்​களிடம் சிலர் பேரத்​தில் ஈடுபட முயன்ற விவ​காரம் தமிழக அரசி​யலில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுதொடர்​பாக ஊத்​தங்​கரை எம்​எல்ஏ இளை​ய​ராஜா அளித்த புகாரின்​பேரில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்​னையைச் சேர்ந்த ‘ஐடிபிஎஸ்’ நிறு​வனத்​தின் நிறு​வனர் தலை​வர் திரு​நாவுக்​கரசு,தியாக​ராஜன், செல்​வன், சீனி​வாசன், ராஜேஷ், திருச்சி நரேஷ், கரூரைச் சேர்ந்த கார்த்​திக், ரமேஷ் ஆகிய 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேசுவதற்​காக ஒரு கார்ப்​பரேட் கம்​பெனி முதல்​கட்​ட​மாக ரூ.180 கோடி வரை ஒதுக்​கியது என கைதானவர்​கள் வாக்​குமூலம் அளித்​துள்​ளனர். இதற்​கான ஏற்​பாடு​கள் அனைத்​தும் சென்னை கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடந்​திருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. எந்​தெந்த எம்​எல்​ஏக்​களிடம் பேரம் பேசுவது என முதலில் பட்​டியல் தயாரித்​துள்​ளனர். அதன்​படி, சென்​னை​யில் உள்ள ஒரு எம்​எல்ஏ உட்பட பல எம்​எல்​ஏக்​களிட​மும் கைதானவர்​கள் பேரம் பேசி​யுள்​ளனர்.

சுமார் ஒரு வாரம் அந்த ஓட்​டலில் திட்​டம் போட்​டு, எம்​எல்​ஏக்​களை அழைத்​துப் பேச முயற்சி செய்த நிலை​யில், இந்த விவ​காரம் வெளியே கசிந்​த​தால் அனை​வரும் ஓட்​டலை பாதி​யிலேயே காலி செய்​துவிட்டுசென்​றுள்​ளனர். சம்​பந்​தப்​பட்ட கார்ப்​பரேட் நிறு​வனத்தை காவல் துறை கண்​டறிந்​துள்ளது.

அதன் நிர்​வாகி​களிடம் விசா​ரணை நடத்​தப்பட உள்​ளது. இந்த வழக்​கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் சிலரை குறிப்​பாக, செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். இவ்​வாறு போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், பேரம் விவ​காரம் தொடர்​பாக சென்னை திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் நாளை (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகு​மாறு செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் ஆகிய இரு​வருக்​கும் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் சம்​மன் அளித்​துள்​ளனர். கரூர் மாவட்​டம் ராமேஸ்​வரப்​பட்டி கிராமத்​தில் உள்ள அவர்​களது பூர்​வீக வீட்​டுக்கு திரு​வல்​லிக்​கேணி காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சீனி​வாசன் நேற்று சென்​று, அவர்​களது தந்தை வேலு​சாமி​யிடம் சம்​மனை அளித்​தார்.

லுக்-அவுட்’ நோட்டீஸ்: ​போலீ​ஸார் தேடி வரும் நிலை​யில், இரு​வரும் தலைமறை​வாக உள்​ள​தாக கூறப்​படு​கிறது. முன்​ஜாமீன் கோரி அசோக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார். இந்​நிலை​யில், இரு​வருக்​கும் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் ‘லுக்​-அவுட்’ நோட்​டீஸ் வழங்​கி​யுள்​ளனர்.

நெடுஞ்​சாலைத் துறை முறை​கேடு வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு கடந்த 3-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு லஞ்ச ஒழிப்​பு போலீஸார் சம்​மன் அனுப்பினர். மருத்துவ சிகிச்​சைக்​காக ஜூன் 26-ம் தேதியே சிங்​கப்​பூர் சென்​று​விட்​ட​தாக அவரது வழக்க​றிஞர்கள் கூறினர். இதுபோல, செந்​தில் பாலாஜி, அவரது தம்பி வெளி​நாடு சென்​று​வி​டா​மல் தடுக்க ‘லுக்​-அவுட்’ நோட்​டீஸ் பிறப்​பித்துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT