கோப்புப் படம்

 
தமிழகம்

கட்சியினரிடையே மோதலை தடுக்க 16 தொகுதிகளை டிஜிட்டல் முறையில் கண்காணித்த சென்னை காவல் துறை

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் முடிவு​களால் கட்​சி​யினரிடையே மோதல் ஏற்​ப​டா​மல் தடுக்​கும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, சென்​னை​யின் 16 தொகு​தி​களை​யும் டிஜிட்​டல் முறை​யில் சென்னை போலீ​ஸார் கண்​காணித்​தனர்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவடைந்த நிலை​யில் நடை​பெற்ற தேர்​தல் முடிவு கருத்து கணிப்​பு​கள் ஒவ்​வொன்​றும் ஒவ்​வொரு வித​மாக இருந்​தன. இதனால் யார் ஆட்சி அமைப்​பார்​கள் என்ற குழப்​ப​மான சூழல் காணப்​பட்​டது.

தேர்​தல் முடிவுக்​காக தமிழகமே மே 4-க்​காக காத்​திருந்​தது. தேர்​தல் முடிவு​களின் அடிப்​படை​யில் கட்​சி​யினரிடையே மோதல் ஏற்​ப​டா​மல் முன்​னரே தடுக்க வேண்​டும் என சென்னை காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் உயர் போலீஸ் அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார்.

இதற்​காக கடந்த 3 நாட்​களாக போலீ​ஸார் நவீன தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி டிஜிட்டல் முறை​யில் கண்​காணிப்பு மேற்கொண்டனர்.

தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் ஆலோ​சனைப்​படி சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகுதி வரைப்​படங்​கள் தனித்​தனி​யாக எடுக்​கப்​பட்டு அவை வகைப்​படுத்​தப்​பட்டு கண்​காணிப்​புக்கு உட்​படுத்​தப்​பட்​டன.

மொத்த வேட்​பாளர்​கள், அவர்​களின் வீடு​கள், அவர்​கள் சார்ந்த கட்சி அலு​வல​கம் உள்ள இடம் போன்ற விவரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. அவர்​கள் மற்​றும் அவர்​களின் ஆதர​வாளர்​கள் தகராறில் ஈடுபட வாய்ப்பு உள்​ளதா என ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அதன்​படி, 692 இடங்​கள் அடை​யாளம் காணப்​பட்டு அவை வகைப்​படுத்​தப்​பட்​டன. அந்த பகு​தி​களின் தன்​மைக்கு ஏற்ப போலீ​ஸார் காவல் வாக​னங்​களு​டன் பணி​யமர்த்​தப்​பட்​டனர். அவர்​களை சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​திலிருந்து போலீஸ் அதி​காரி​கள் தொழில்​நுட்ப உதவி​யுடன் கண்​காணித்​தனர்.

இதற்கு வசதி​யாக காவல் வாக​னங்​களில் ஜிபிஎஸ் உள்​ளிட்ட கருவி​கள் பொருத்​தப்​பட்​டன. பணி​யில் உள்ள போலீ​ஸாரின் பட்​டியல் மற்​றும் அவர்​களது செல்​போன் எண்​ணும் சேகரிக்​கப்​பட்​டது.

தொடர்ந்து துணை ராணுவப் படை​யினர், சென்னை போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்​தும், அடுத்த கட்ட கண்​காணிப்​பில் சென்னை போலீ​ஸார் தனி​யாக​வும் ஈடு​பட்​டனர். மேலும், சென்​னை​யில் உள்ள 3 வாக்கு எண்​ணும் மையங்​களில் கூடு​தலாக போலீ​ஸார் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டிருந்​தனர்.

அதோடு கட்​சி​யினர் யாரேனும் மோதலில் ஈடு​பட்​டால் அவர்​களை உடனடி​யாக கைது செய்து அடைத்து வைக்க 21 திரு​மண மண்​டபங்​களும்​ தயார்​ நிலை​யில்​ வைக்கப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT