தமிழகம்

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் மார்ச் 23 முதல் மூடல்: சென்னை மெட்ரோ தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: நந்தனம் மெட்ரோ ரயில் நிலை​யத்​தின் பி4 நுழை​வா​யில் வரும் 23-ம் தேதி முதல் நிரந்​தர​மாக மூடப்​படு​வ​தாக மெட்ரோ நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நந்​தனத்​தில் நடை​பெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்​டாம் கட்ட கட்​டு​மானப் பணி​கள் மற்​றும் ஒருங்​கிணைப்​புப் பணி​கள் காரண​மாக, நந்தனம் மெட்ரோ நிலை​யத்​தின் பி4 நுழை​வா​யில் பிஎஸ்​என்​எல் அலு​வல​கம் நோக்கி செல்​லும் வழி, வரும் மார்ச் 23-ம் தேதி முதல் நிரந்​தர​மாக மூடப்​படுப்​படு​கிறது.

          

இரண்​டாம் கட்ட திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக மேற்​கொள்​ளப்​பட்டு வரும் முக்​கிய உள்​கட்​டமைப்பு மேம்​பாடு மற்​றும் ஒருங்​கிணைப்​புப் பணி​களை சுலப​மாக்​கு​வதற்​கு, நந்தனம் மெட்ரோ நிலை​யத்​தில் உள்ள தற்​போதைய B4 நுழை​வா​யிலை மூடு​வது அவசி​ய​மாகும்.

இது நீண்​ட​கால அடிப்​படை​யில் போக்​கு​வரத்து இணைப்​பு, பயணி​களின் வசதி மற்​றும் செயல்​பாட்​டுத் திறனை மேம்​படுத்​து​வதை உறுதி செய்​யும். மேலும், தற்​போதுள்ள முதலாம் கட்ட நந்தனம் மெட்ரோ நிலை​யத்துக்​கான அணுகல் வசதி, இரண்​டாம் கட்​டத் திட்​டத்​தின் கீழ் புதி​தாகத் திறக்​கப்​பட​வுள்ள மெட்ரோ நிலைய நுழை​வா​யில் வழி​யாக பயணி​களுக்​குக் கிடைக்​கும்.

பயணி​கள் தங்​களின் பயணத்தை திட்​ட​மிட்​டு, அரு​கிலுள்ள மாற்று நுழை​வா​யில்​களை பயன்​படுத்​து​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு கிறார்​கள், பி4 நுழை​வாயி​லின் அதே​திசை​யில் அமைந்​துள்ள ஏ2 மற்​றும் ஏ3 நுழை​வா​யில்​கள்.

மேலும் எதிர்​புறத்​தில் அமைந்​துள்ள பி1, பி2, மற்​றும் பி3 நுழை​வா​யில்​கள், இந்த நுழை​வா​யில்​கள் அனைத்​தும் அண்ணா சாலை​யிலேயே அமைந்​துள்​ளன. இவை முழு​மை​யாக செயல்​படு​வ​தால், பயணி​கள் எந்​தவொரு சிரம​முமின்றி இவற்றை பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

வழிகாட்டி பலகைகள்

பயணி​கள் எளி​தாகச் செல்​வதை உறுதி செய்​வதற்​காக, மெட்ரோ ரயில் நிலைய வளாகத்​தி​லும் அதைச் சுற்​றி​யுள்ள முக்​கிய இடங்​களி​லும் போது​மான வழி​காட்​டிப் பலகைகள் மற்​றும் அடை​யாளப் பலகைகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.

ஏதேனும் சிரமம் ஏற்​பட்​டால், பயணி​கள் உதவிக்கு நிலைய பணி​யாளர்​களை அணுகலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT