அபிராமி

 
தமிழகம்

பாலில் விஷம் கலந்து குழந்தைகள் கொலை - குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​திரு​மணத்தை மீறிய உறவு காரண​மாக குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்​கில், சிறை​யில் உள்ள அபி​ராமிக்கு ஜாமீன் வழங்க முடி​யாது என சென்னை உயர் நீதி​மன்​றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் குன்​றத்​தூரைச் சேர்ந்த விஜய் - அபி​ராமி தம்​ப​திக்கு திரு​மண​மாகி 2 குழந்​தைகள் (6 வயது, 4 வயது) இருந்தனர். டிக்​-​டாக் மூல​மாக சமூக வலை​தளங்​களில் பிரபலமான அபி​ராமிக்​கும், அப்​பகு​தி​யில் பிரி​யாணிக் கடை நடத்தும் மீனாட்சி சுந்​தரம் என்​பவருக்​கும் திரு​மணத்தை மீறிய உறவு ஏற்​பட்​டது. இந்த உறவுக்கு தடை​யாக இருந்த தனது 2 குழந்தைகளை​யும் அபி​ராமி கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்​தார்.

பின்​னர், கேரளா​வுக்கு தப்​பிச் செல்ல முயன்ற அபி​ராமி, மீனாட்சி சுந்​தரத்தை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்கை விசாரித்த காஞ்​சிபுரம் மகளிர் நீதி​மன்​றம், அவர்​கள் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்​தும், தண்​டனையை நிறுத்திவைத்து தனக்கு ஜாமீன் வழங்​கக் கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அபி​ராமி மேல்​முறை​யீடு செய்​தார்.

நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், கே.​ராஜசேகர் அமர்​வி்ல் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது. குற்றசம்​பவத்​துக்கு நேரடி ஆதா​ரங்​கள் இல்​லாத​தால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்​டும் என அபி​ராமி தரப்​பில் வாதிடப்​பட்​டது. அதை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், வழக்கின் முதல் சாட்​சி​யான அபி​ராமி​யின் கணவர் அளித்​துள்ள சாட்​சி​யத்​தில் குழந்​தைகளுக்கு கொடுக்​கப்​பட்ட பால் கசப்பாகவும், விஷம் கலந்து இருந்​த​தாக​வும் தெரி​வி்த்​துள்​ளார். இது தண்​டனையை நிறுத்தி வைக்​கும் அளவுக்கு தகு​தி​யான வழக்கு அல்ல என்று கூறி அபி​ராமி​யின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்​து, பிர​தான வழக்கு விசா​ரணை​யை நவ.4-ம்​ தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்​.

SCROLL FOR NEXT