சென்னை: குதிரை பேர வழக்கில் கைதான 11 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீஸார், 14 பேரை கைது செய்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுள்ள இந்த வழக்கில், இதுவரை 11 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இருவரது மனுக்களும் இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.