தமிழகம்

ஏரியின் குறுக்கே பாதை அமைக்க அனுமதி: திருவள்ளூர் ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

சென்னை: கரிம்பேடு ஏரி​யின் குறுக்கே பாதை அமைக்க அனுமதி வழங்கி திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்சி​யர் பிறப்​பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு: கரிம்​பேடு கிராமத்​தில் உள்ள சாவித்​திரி ஏரி முக்​கிய குடிநீர் ஆதா​ர​மாக உள்ளது. இந்​நிலை​யில், சாலை அமைக்​கும் பணிக்​காக இந்த ஏரியின் குறுக்கே பாதை அமைக்க மாவட்ட ஆட்சி​யர் அனுமதி வழங்​கியுள்​ளார். இது தமிழ்​நாடு நீர்​நிலைகள் பாது​காப்பு, ஆக்கிரமிப்பு அகற்​றல் சட்​டத்​துக்கு எதிரானது.

எனவே, ஆட்​சி​யரின் உத்​தரவை ரத்து செய்து, ஏரியை மீட்க உத்தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்பட்​டிருந்​தது. நீதிப​தி​கள் எஸ்.எம்.சுப்​பிரமணி​யம், ஆர்.ராஜேஷ் விவேகானந்​தன் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனுதா​ரர் தரப்​பில், “இதற்கு அனுமதி வழங்க நில நிர்​வாக ஆணை​யருக்கே அதி​காரம் உள்​ளது” என்று வாதிட்​டார்.

அரசுத் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “வட்​டார வளர்ச்சி அதிகாரி பரிந்​துரையின் பேரில், தண்​ணீர் செல்​லத் தடை​யின்றி குழாய்​கள் அமைத்து, பாதை அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது. கடந்த 2001 ஏப்.2-ம் தேதி வெளி​யிடப்​பட்ட அரசின் சுற்​றறிக்கை அடிப்படை​யில், பொதுப்​பணி உள்​ளிட்ட துறைகளின் ஆய்​வுக்குப் பிறகு நில வகை மாற்​றம் செய்​யப்​பட்டு ஆட்சி​யர் அனு மதியளித்துள்​ளார்” என்றார்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “நீர் நிலைகளில் இதுபோன்ற அனுமதி​ வழங்க நில நிர்​வாக ஆணையருக்​குத் ​தான் அதி​காரம் உள்​ளது என்​ப​தால், திரு​வள்​ளூர் ஆட்​சி​யரின் உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. இது​ தொடர்​பாக நிலநிர்​வாக ஆணையரிடம் அனுமதி கோரி விண்​ணப்​பித்​திருந்​தால், அவர் விரைந்து உரிய முடிவை எடுக்​கலாம்” என்று உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT