தமிழகம்

தேர்தலையொட்டி சென்னை மாநகராட்சி ஏற்பாடு: 3 ஆயிரம் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தலை​யொட்டி வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், சென்​னை​யில் 3 ஆயிரம் ஆட்​டோக்​களில் மாநக​ராட்சி சார்​பில் விழிப்​புணர்வு ஸ்டிக்​கர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் ஏப். 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் 100 சதவீத வாக்​குப்​ப​திவை உறுதி செய்​யும் நோக்​கத்​துடன், வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் சிலம்​பம், பொய்க்​கால் குதிரை​யாட்​டம், புலி​யாட்​டம், பொம்​மலாட்​டம், மல்​லர் கம்​பம் மற்​றும் பறை இசை போன்ற கலை நிகழ்ச்​சிகள் சென்னை முழு​வதும் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

          

அதே​போல், இளைய தலை​முறையைக் கவரும் வகை​யில் கானா பாடல்​கள், டிஜே இசை மற்​றும் பொது இடங்​களில் `ஃபிளாஷ் மாப்' எனப்​படும் திடீர் நடனக் குழுக்​களின் கலை நிகழ்ச்​சிகளும் மாநக​ராட்சி சார்​பில் அரங்​கேற்​றப்​படு​கின்​றன.

இதன் தொடர்ச்​சி​யாக, பொது​மக்​களிடையே நேரடி விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் வகை​யில் 3 ஆயிரம் ஆட்​டோக்​களில் தேர்​தல் விழிப்​புணர்வு விளம்​பரங்​கள் ஒட்​டும் பணி, நேற்று தொடங்​கியது.

இதையொட்டி, கண்​ணப்​பர் திடல் விளை​யாட்டு மைதானத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ஆட்​டோக்​களின் பின்​புறம் `போடு​வோம் ஓட்​டு, வாங்க மாட்​டோம் நோட்​டு' மற்​றும் `தேர்​தல் நாள்: 23 ஏப்​ரல் 2026' ஆகிய வாசகங்​கள் அடங்​கிய விழிப்​புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்​டப்​பட்​டன.

மேலும், நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற ஆட்டோ ஓட்​டுநர்​கள் அனை​வரும், வாக்​களிப்​ப​தன் அவசி​யத்தை வலி​யுறுத்​தும் வகை​யில் தங்​களது இடது ஆள்​காட்டி விரலை உயர்த்தி விழிப்​புணர்வு ஏற்​படுத்​தினர். இந்த ஆட்​டோக்​கள் சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்​கும் சென்​று, விழிப்​புணர்​வை ஏற்​படுத்​த உள்​ளன.

SCROLL FOR NEXT