தமிழகம்

செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற காலக்கெடு டிச.14-ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: செல்​லப் பிராணி​களுக்​கான உரிமம் பெறு​வதற்​கான காலக்​கெடு டிச.14-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக சென்னை மாநக​ராட்சி தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: செல்​லப்​பி​ராணி​களுக்கு ஆண்​டு​தோறும் வெறிநோய்த் தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளதை உறு​திப்​படுத்​த​வும், தடுப்​பூசி செலுத்​தப்​பட்ட நாள் முதல் ஓராண்​டுக் காலத்​துக்கு மட்​டும் உரிமம் செல்​லத்​தக்​கது என்​பதை உறு​திப்​படுத்தி மீண்​டும் உரிமம் புதுப்​பிக்​கப்​படு​வதை உறுதி செய்​ய​வும், செல்​லப் பிராணி​களுக்கு மைக்​ரோசிப் பொருத்தி உரிமம் பெறு​வது கட்டாயமாக்கப்​பட்​டது.

அதன்​படி இந்த மைக்​ரோசிப் எண்​ணுடன் செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளரின் பெயர், முகவரி உள்​ளிட்ட தரவு​கள் பதிவு செய்​யப்​படும். அந்த வகை​யில் சென்னை மாநக​ராட்சி இணை​யதளத்​தில் இது​வரை 91,711 செல்​லப் பிராணி​களின் விவரங்​கள் பதிவு செய்

​யப்​பட்டு 45,916 செல்​லப் பிராணி​களுக்கு உரிமங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் செல்​லப் பிராணி​களுக்​கான உரிமம் பெறு​வதற்கு நவ.23-ம் தேதி வரை காலக்​கெடு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்​கிடையே செல்​லப் பிராணி​கள் உரிமை​யாளர்​களின் கோரிக்​கை​யின் அடிப்​படை​யில் உரிமம் பெறு​வதற்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட காலக்​கெடு தற்​போது டிச.7-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் தற்​போது பெய்து வரும் தொடர் மழை காரண​மாக​வும் செல்​லப் பிராணி​கள் உரிமை​யாளர்​களின் கோரிக்​கையை ஏற்று உரிமம் பெறு​வதற்​கான காலக்​கெடு டிச.14-ம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்​துக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​கள் இதைப் பயன்​படுத்தி டிச.14-ம் தேதிக்​குள் தங்​களது செல்​லப் பிராணி​களுக்​கான உரிமத்தை திரு.​வி.க.நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாப்​பேட்​டை, மீனம்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர் ஆகிய பகு​தி​களில் செயல்​பட்டு வரும் மாநக​ராட்​சி​யின் செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்​களில் பெற்​றுக்​கொண்​டு, அபராதம் செலுத்​து​வதைத் தவிர்க்​கு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT