சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்துவோர் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2026-27-ம் நிதியாண்டு தொடங்கிவிட்டதால், மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் அதாவது வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தினால், மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவதோடு மட்டுமில்லாமல், அரசு தரும் இந்த தள்ளுபடியை சரியாகப் பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு சதவீத அபராதத் தொகையையும் தவிர்க்கலாம்.
பொதுமக்கள் தங்கள் வரிகளை எளிமையான முறையில் செலுத்த நேரடியாக கணினி வரி வசூல் மையங்கள், https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம், டிஎன் அர்பன் இ-சேவை செயலி மற்றும் யுபிஐ செயலிகள் என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
ஏப்.30-க்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.