தமிழகம்

சென்னை விமான நிலைய விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் நிர்​வாக பொறுப்பை இந்​திய விமான நிலை​யங்​கள் ஆணை​யத்​திடம் (ஏஏஐ) இருந்து வேறு ஒரு திறமை​யான நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கக் கோரி பிரதமர் நரேந்​திர மோடிக்​கு, முதல்​வர் விஜய் எழு​திய கடிதம் வெளி​யாகி​யுள்​ளது.

சென்னை விமான நிலை​யத்தை நிர்​வகிக்​கும் பொறுப்​பில் இருந்து இந்​திய விமான நிலை​யங்​கள் ஆணை​யத்தை (ஏஏஐ) மாற்​றி, வேறு அமைப்​பிடம் ஒப்​படைக்​கக் கோரி பிரதமர் நரேந்​திர மோடிக்​கு, முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ள​தாக கடந்த வாரம் தகவல்​கள் வெளி​யாகின.

இந்​நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த ஆக.5-ம் தேதி பிரதமருக்கு முதல்​வர் விஜய் எழு​திய கடிதத்​தின் நகல் தற்​போது வலை​தளங்​களில் வெளி​யாகி​யுள்​ளது. அந்​தக் கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை விமான நிலையம் பயணி​களின் எதிர்​பார்ப்​பு​களுக்கு ஈடு​கொடுக்க முடி​யாத நிலை​யில் உள்​ளது. ஏஏஐ தரவு​களின்​படி, 2026 ஏப்​ரல் நில​வரப்​படி பயணி​கள் போக்​கு​வரத்​தில் சென்னை 6-வது இடத்​துக்​குச் சரிந்​துள்​ளது.

சரக்கு போக்​கு​வரத்​தி​லும் சென்னை விமான நிலை​யம் பின்​தங்​கி​யுள்​ளது. இது விமான நிலை​யத்​தின் முழுத் திறனும் பயன்​படுத்​தப்​ப​டா​மல் வீணாவதையே காட்​டு​கிறது. விமான நிலை​யத்​தில் கழி​வறை​கள், பயணி​கள் இருக்​கைகள், குளிர்​சாதன வசதி​கள் உட்பட பல்​வேறு அடிப்​படை கட்​டமைப்​பு​களில் குறை​பாடு​கள் உள்​ளன.

எனவே, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் இயக்​கம், மேலாண்மை மற்​றும் எதிர்​கால மேம்​பாட்​டுப் பணி​களை, ஏஏஐ அல்​லாத வேறு தகு​தி​யான நிறு​வனத்​திடம் விரை​வில் ஒப்​படைக்க வேண்​டும். இந்த விவ​காரத்​தில் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் உறு​தி​யான முடிவை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

பிரதமர் அலு​வல​கம் நடவடிக்கை: இந்த கடிதம் குறித்​து, ஆக.14-ம் தேதி சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகத்​தின் செயலருக்கு பிரதமர் அலு​வலக இயக்​குநர் சந்​திர மோகன் தாக்​கூர் விளக்​கம் கோரி​யுள்​ளார். அதில், முதல்​வரின் இந்​தக் கடிதம் தொடர்​பாக அமைச்​சகம் தனது கருத்​துகளை​யும், பதிலை​யும் பிரதமர் அலு​வல​கத்​துக்கு விரை​வில்​ சமர்ப்​பிக்​க​வும்​ என கூறப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT