செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்.

 
தமிழகம்

பாலாற்றில் தடுப்பணைகள்.. கொளவாய் ஏரியில் படகு சவாரி: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்​கல்​பட்டு சட்​டப்​பேரவை தொகுதி அந்த மாவட்​டத்​தின் தலைநகர் தொகு​தி​யாக விளங்​கு​கிறது. கடந்த தேர்​தலைப் போலவே தற்​போதும் எம்​.கஜா என்ற கஜேந்​திரனுக்கு வாய்ப்பு வழங்​கி​யுள்​ளது அதி​முக. கடந்த முறை​போல அல்​லாமல், இந்த முறை வெற்றி பெற்​று​விட வேண்​டும் என்ற நோக்​கில் தீவிர​மாக களப்​பணி ஆற்றி வரு​கிறார் கஜேந்​திரன்.

அதி​முக​வின் பொது​வான வாக்​குறு​தி​களைக் கூறு​வதோடு, ‘‘கட்​சிக்கு வெற்​றியைத் தேடித் தரும் நிர்​வாகி​களுக்கு தங்க மோதிரம், ராயல் என்ஃபீல்ட் பைக் வழங்​கு​வேன். பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கையாலேயே அதை வழங்க ஏற்​பாடு செய்​வேன்’’ என்​றும் அறி​வித்​து, நிர்​வாகி​கள், தொண்​டர்​களை உற்​சாகப்​படுத்​தி, வாக்​கு​களை சேகரித்து வரு​கிறார்.

          

செங்​கல்​பட்டு தொகுதி வளர்ச்​சிக்​கான தனது 5 ஆண்டு செயல் திட்​டங்​கள் குறித்து அவர் கூறிய​தாவது: கூடு​வாஞ்​சேரி, மறைமலை நகர், செங்​கல்​பட்டு நகராட்​சிகள் தரம் உயர்த்​தப்​பட்டு, குடிநீர், சாலை, மழைநீர் கால்​வாய், கழிவு மற்​றும் குப்பை மேலாண்மை போன்ற அடிப்​படை வசதி​களுக்கு முன்​னுரிமை வழங்​கப்​படும். இந்த நகராட்​சிகளில் விரை​வாக​வும், தரமான முறை​யிலும் பாதாள சாக்​கடை திட்​டம் நிறைவேற்​றப்​படும்.

பரனூர் சுங்​கச் சாவடியை மாற்று இடத்​தில் அமைத்​து, வாகன நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். செங்​கல்​பட்டு முழு​வதும் தண்​ணீர்ப் பிரச்​சினையைப் போக்​கும் வகை​யில், பாலாற்​றில் 5 கி.மீ.க்கு ஒரு இடத்​தில் தடுப்​பணை கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். செங்​கல்​பட்​டின் அடை​யாள​மான கொள​வாய் ஏரி​யில் ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்​டு, ஏரியை தூர்​வாரி, சுற்​றுலாத் தலமாக மேம்​படுத்​தப்​படும். படகு சவாரி ஏற்​பாடு செய்​யப்​படும்.

செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் சூப்​பர் ஸ்பெஷாலிட்டி வசதி​கள், நவீன பரிசோதனைக் கருவி​கள் அமைக்​கப்​பட்​டு, ஆம்​புலன்ஸ் சேவை​கள் மேம்​படுத்​தப்​படும். அரசின் சேவை மக்​களுக்கு எளி​தாக கிடைக்க வழி​வகை செய்​யப்​படும். கிராமப் பகு​தி​களில் மினி கிளினிக் திட்​டம் மூலம் மருத்​து​வ​மனை​கள் திறக்​கப்​படும்.

இது மட்​டுமின்​றி, தாம்​பரத்​தில் இருந்து செங்​கல்​பட்டு வரை பறக்​கும் மேம்​பால வசதி, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு மெட்ரோ ரயில் வசதி, செங்​கல்​பட்டு வரை மெட்ரோ ரயில் திட்​டம் விரி​வாக்​கம், பட்டா இல்​லாத குடும்​பங்​களுக்கு வீட்​டுமனை பட்​டா, அரசுப் பள்​ளி​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் மேம்​பாடு, கோயம்​பேடு​போல செங்​கல்​பட்​டிலும் காய்​கறி மார்​க்கெட் வசதி, அறி​வு​சார் மையங்​களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்​வுக்கு இலவசப் பயிற்​சி, மழைக் காலங்​களில் குடி​யிருப்​பு​களை மழைநீர் தேங்​காமல் இருக்கவடி​கால் வசதி, இளைஞர்​களுக்கு புதிய வேலை​வாய்ப்​பு​கள் ஆகிய திட்​டங்​களை​யும் செயல்​படுத்​து​வேன்.

இதுத​விர, நான் பிரச்​சா​ரம் மேற்​கொண்ட இடங்​களில் எல்​லாம் பொது​மக்​கள் பல்​வேறு குறை​களைத் தெரி​வித்​தனர். அவற்றை கண்​டிப்​பாக நிவர்த்தி செய்​வேன். அதி​முக அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​கள் தொகு​தி​யில் அனை​வருக்​கும் கிடைக்க ஏற்​பாடு செய்​வேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

மக்​களின் முக்​கிய கோரிக்கை பாலாற்​றில் தடுப்​பணை கட்​டி, கடலில் தண்​ணீர் வீணாக கலப்​பதை தடுக்க வேண்​டும். தாம்​பரத்​தில் இருந்து செங்​கல்​பட்டு வரை உயர்​மட்ட மேம்​பாலம் கட்ட வேண்​டும்.

போக்​கு​வரத்து நெரிசலைக் கட்​டுப்​படுத்த வேண்​டும். நீர்​நிலைகளை பாது​காக்க வேண்​டும். மருத்​து​வக் கட்​டமைப்​பு​களை மேம்​படுத்த வேண்​டும், தடுப்பு மருந்து தொழிற்​சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் அனைத்து வசதி​களை​யும் நிறைவேற்​றி, மருத்​து​வர், செவிலியர் பற்​றாக்​குறையைப் போக்க வேண்​டும் என்​ப​தை பிர​தான கோரிக்​கைகளாக முன்​வைத்​துள்​ளனர்​ செங்​கல்​பட்​டு தொகுதி மக்​கள்​.

SCROLL FOR NEXT