கோப்புப்படம்

 
தமிழகம்

மாநகராட்சியின் நவீன மாடுகள் காப்பகம் பராமரிப்பு: தொண்டு நிறுவனங்கள் விருப்ப கடிதம் கொடுக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: நவீன மாடுகள் காப்​பகங்​களை பராமரிக்க விரும்​பும் தொண்டு நிறு​வனங்​கள் மாநக​ராட்சி ஆணை​யரிடம் விருப்பக் கடிதம் கொடுக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் 22,875 மாடுகள், அவற்​றின் உரிமை​யாளர்​களால் வளர்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் பெரும்​பாலான மாடுகள் உரிய இடவசதி இன்​றி, தொழு​வங்​களுக்​குள் வைத்து பராமரிக்​கப்​ப​டா​மல் சாலைகள் மற்​றும் பொது இடங்​களில் சுற்​றித்​திரிந்து போக்​கு​வரத்​துக்கு இடையூறு மற்​றும் பொது சுகா​தார சீர்​கேடு ஏற்​படு​கின்றன. சில நேரங்​களில் பொது​மக்​கள் மாடு​களால் தாக்​கப்​படும் சம்​பவங்​களும் நடக்​கின்​றன.

ரூ.10 ஆயிரம் அபராதம்: இப்​படி சுற்​றித்​திரி​யும் மாடு​களை கட்​டுப்​படுத்​தும் பொருட்​டு, மாநக​ராட்​சி​யின் 15 மண்​டலங்​களுக்​கும் தலா ஒரு மாடு பிடிக்​கும் வாக​னம் ஒதுக்​கப்​பட்டு ஒவ்​வொரு மண்​டலத்​துக்​கும் தலா 5 மாடு பிடிக்​கும் ஊழியர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பிடிக்​கப்​படும் மாடுகள் புதுப்​பேட்​டை​யில் உள்ள மாநக​ராட்சி மாட்​டுத் தொழு​வத்​தில் அடைக்​கப்​பட்​டு, மாடு ஒன்​றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதன் உரிமை​யாளர்​களிடம் இருந்து அபராத​மாக வசூலிக்​கப்​படு​கிறது.

மீண்​டும் சாலைகளில் விடக்​கூ​டாது என்ற நிபந்​தனை​யுடன் அந்த மாடுகள் உரிமை​யாளர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 2021 முதல் 2025 வரை மொத்​தம் 16,692 சுற்​றித்​திரி​யும் மாடுகள் பிடிக்​கப்​பட்​டு, அவற்​றின் உரிமை​யாளர்​களிட​மிருந்து ரூ.4.43 கோடி அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மாட்​டின் உரிமை​யாளர்​கள், மாடு வளர்ப்​போர் சங்க நிர்​வாகி​கள் கோரிக்​கைப்​படி, சென்​னை​யில் 17 இடங்​களில் நவீன மாடுகள் காப்​பகங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் திரு​வொற்​றியூர், மாதவரம், ராயபுரம், தேனாம்​பேட்டை ஆகிய மண்​டலங்​களில் நவீன மாடுகள் காப்​பகங்​களில் 710 மாடுகள் அவற்​றின் உரிமை​யாளர்​களால் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மேலும், 13 இடங்​களில் சுமார் 1,100 மாடு​களை பரமாரிக்​கும் வகை​யில் காப்​பகங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: இத்​திட்​டத்​தில் பேசின் பாலம் சாலை​யில் உள்ள 550 மாடு​களை பரமரிக்​கும் திறன் கொண்ட காப்​பகத்​தில் உள்ள மாடு​களுக்கு தீவனம் வழங்கி பராமரிப்​ப​தற்கு சேவை மனப்​பான்மை உள்ள தன்​னார்​வலர் குழு​விடம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட​வுள்​ளது.

இந்த சேவை மற்ற காப்​பகங்​களுக்​கும் விரி​வாக்​கப்பட உள்​ளது. விருப்​பம் உள்ள தொண்டு நிறு​வனங்​கள், விருப்ப கடிதத்தை மாநக​ராட்சி ஆணை​யருக்கு அனுப்​பலாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT