அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் தீ விபத்து: இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைப்பு

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணை​யரகத்​தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்​பட்​டது. இரண்​டரை மணி நேரம் போராடி தீ அணைக்​கப்​பட்​டது. சென்னை அண்​ணாநகர் மேற்​கு, 2-வது அவென்​யூ​வில் ஜிஎஸ்டி ஆணை​யரகம் செயல்​பட்டு வரு​கிறது.

நேற்று காலை 8.30 மணி​யள​வில், இந்த அலு​வல​கத்​தின் தரைத்​தளத்​தில் உள்ள கேன்​டீனில் இருந்து திடீரென புகை கிளம்​பியது. அது சிறிது நேரத்​தில் தீயாக மாறி மளமளவென பெண் அதி​காரி​கள் ஓய்​வறை மற்​றும் இதர அறை​களுக்கு பரவியது.

இதனால் ஜிஎஸ்டி அலு​வலக வளாகத்​தில் இருந்​தவர்​கள் உடனடி​யாக வெளி​யேறினர். இதுகுறித்து தீயணைப்பு கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து தீயணைப்​புத் துறை இணை இயக்​குநர் சத்​ய​நா​ராயணா தலை​மை​யில் 10 தீயணைப்பு வாக​னங்​களில் வந்த 60 தீயணைப்பு வீரர்​கள் 2.30 மணி நேரம் போராடி, தண்​ணீரை பீய்ச்​சி​யடித்து தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர்.

இந்த விபத்​தில் முக்​கிய ஆவணங்​கள், கேன்​டினில் இருந்த பாத்​திரங்​கள், மின்​னணு உபகரணங்​கள் உட்பட பல்​வேறு வகை​யான பொருட்​கள் சேதமடைந்​தன.

மின்​கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டதா அல்​லது சதிச் செயலா என திரு​மங்​கலம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். முன்​ன​தாக தடய​வியல் துறை அதி​காரி​களும் தீ விபத்து நடந்த இடத்​தைப் பார்​வை​யிட்டு தடயங்​களை சேகரித்​தனர்.

<div class="paragraphs"><p>சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
இணை தயாரிப்பாளரை அடுத்து போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in