நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

நாடாளுமன்றத் தேர்தலின்போது ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் மீதான குற்றச்சாட்டு பதிவு நிறுத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​நா​டாளு​மன்​றத் தேர்​தலின்​போது ரூ.4 கோடி பணம் பறி​முதல் செய்த வழக்​கில், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர் மீதான குற்​றச்​சாட்​டுப் பதிவை நிறுத்​தி​வைத்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2024 நாடாளு​மன்​றத் தேர்​தலின்​போது நெல்லை விரைவு ரயி​லில் ரூ.4 கோடி பணம் கைப்​பற்​றப்​பட்ட நிலை​யில், அந்​தப் பணம் நயி​னார் நாகேந்​திரன், அவரது தொகுதி வாக்​காளர்​களுக்கு கொடுப்​ப​தற்​காக கொண்டு செல்​லப்​பட்​ட​தாகக் கூறப்​பட்​டது.

இதுதொடர்​பாக தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழக பாஜக​வின் முன்​னாள் அமைப்பு பொதுச்​செய​லா​ளர் கேசவ விநாயகம் மற்​றும் பாஜக நிர்​வாகி எஸ்​.ஆர்​.சேகர் உள்​ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி காவல்​துறை வழக்​குப்​ப​திவு செய்​தது.

அதைத் தொடர்ந்​து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​தில் இவர்​களுக்கு எதி​ராக குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு, அதன் நகல் வழங்​கப்​பட்​டது. அதன்​தொடர்ச்​சி​யாக குற்​றம்​சாட்​டப்​பட்ட அனை​வரின் மீதான குற்​றச்​சாட்​டு​கள் இன்று (ஆக.12) ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​தில் பதிவு செய்​யப்பட இருந்​தது.

இந்​நிலை​யில் தன் மீதான வழக்கை ரத்து செய்யவும், விசா​ரணைக்​குத் தடை கோரி​யும் உயர் நீ​தி​மன்​றத்​தில் எஸ்.ஆர்.சேகர் மனு தாக்​கல் செய்தார்.

அதில், “வாக்​காளர்​களுக்கு அளிக்க நான் பணம் கொண்டு சென்​றேன் என்​ப​தற்​கான சட்​டப்​பூர்வ ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் காவல்​துறை தாக்​கல் செய்​ய​வில்​லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்​டும்” என குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி லட்​சுமி நாராயணன் முன் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் குரு கிருஷ்ணகு​மார் ஆஜராகி, “மனு​தா​ரருக்கு எதி​ராக தாக்​கல் செய்த இறுதி அறிக்​கையை ரத்து செய்ய வேண்​டும். நாளை (இன்​று) குற்​றச்​சாட்டு பதிவு நடை​பெறவுள்​ள​தால் வழக்கு விசா​ரணை முடிவடை​யும் வரை அதைத் தள்​ளிவைக்க வேண்​டும்” என வாதிட்​டார்.

காவல்​துறை தரப்​பில் ஆஜரான மாநில குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​தி​யன், மனுவுக்கு விரி​வாகப் பதில் அளிக்க கால அவ​காசம் வேண்​டும் எனக் கோரி​னார். இதையடுத்து, வழக்​கின் விசா​ரணையை ஆக.19-ம் தேதிக்கு தள்​ளி​வைத்த நீதிபதி லட்​சுமி நாராயணன், பதில் மனு தாக்​கல் செய்ய காவல்​துறைக்கு உத்​தர​விட்​டார். அது​வரை குற்​றச்​சாட்​டுப்​ பதிவு​களை மேற்​கொள்​ளக்​ கூடாது எனவும்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT