தமிழகம்

தாராபுரத்தில் பிரச்சாரத்தின்போது வாக்குவாதம்: பாதியில் திரும்பிய தவெக வேட்பாளர் சத்யபாமா

செய்திப்பிரிவு

தாராபுரம்: ​தா​ராபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவுடன் விவ​சா​யிகள் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தால் அவர் பிரச்​சா​ரத்தை பாதி​யில் முடித்து​ திரும்​பினார்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​கான இடைத்​தேர்​தல் வரும் அக்​.6-ம் தேதி நடக்​கிறது. தவெக, திமுக, அதி​முக, நாதக, இந்​திய கம்​யூனிஸ்ட் உள்பட மொத்​தம் 22 வேட்பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். தாராபுரம் தொகு​திக்கு உட்​பட்ட குண்​டடம் ஒன்​றி​யம் மேட்​டுக்​கடை, ஓடைக்​கல்​பாளை​யம்,நந்​தவனம்​பாளை​யம், முத்​துக்​க​வுண்​டம்​பாளை​யம், வெரு​வேடம்​பாளை​யம் உள்​ளிட்ட கிராமங்​களில் தவெக வேட்​பாளர் சத்​ய​பாமா கூட்​ட​ணிக் கட்சி நிர்​வாகி​களு​டன் நேற்று வாக்​குசேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

வெரு​வேடம்​பாளை​யத்​தில் திறந்த வேனில் நின்​றபடி அவர் பேசி​ய​போது, கூட்​டத்​திலிருந்த நபர் ஒரு​வர், “அதி​முக சார்​பில் வெற்றி பெற்று எம்​எல்​ஏ​வாக இருந்த நீங்​கள், எதற்​காக ராஜி​னாமா செய்​து​விட்டு தற்​போது தவெக​வில் போட்​டி​யிடு​கிறீர்​கள்?” என கேள்வி எழுப்​பிய​தால் சலசலப்பு ஏற்​பட்​டது. இதற்கு பதிலளித்த சத்​ய​பா​மா, “அதி​முக, திமுக​வுடன் இணைந்து ஆட்​சி​யமைக்க ரகசி​யப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தால் வெளி​யேறினேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்​து, கூட்​டத்​தில் திரண்​டிருந்த 50-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள், “பிஏபி பாசனப் பகு​தியே கடுமை​யான வறட்​சி​யில் தவிக்​கும்​போது, உப்​பாறு அணைக்கு தண்​ணீர் கொண்டு செல்​வ​தாகக் கூறி எங்​களுக்​குத் துரோகம் செய்​கிறீர்​களா” என்​றும் “பிஏபி வாய்க்​காலைத் தூர்​வார சட்​டப்​பேர​வை​யில் நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவித்து, இது​வரை ஏன் அந்​தப்பணி​கள் தொடங்​கவில்லை என்​றும் கேள்வி எழுப்​பினர்.

இதைத்​தொடர்ந்து வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தால் கூச்​சல் குழப்​பம் நில​வியது. போலீ​ஸார் அங்​கிருந்​தவர்​களை சமா​தானம் செய்​தனர். நிலை​மை​யைச் சமாளிக்க முடி​யாத​தால், தனது பேச்சை பாதி​யிலேயே நிறுத்​தி​விட்டு வேட்​பாளர் அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​றார்.

SCROLL FOR NEXT