சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் முழுவதும் மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்கும்போது, அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக ரூ.10 சேர்த்து வசூலிக்கின்றனர். காலி பாட்டிலை திரும்ப கொடுத்ததும் அந்த தொகை திருப்பித் தரப்படுகிறது.
சில இடங்களில் பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் திருப்பி தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் மது பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல், சமூக நல வரியை தமிழக அரசு விதித்தது.
மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்ய அல்லது பாதுகாப்பாக அகற்ற இந்த வரி வருவாய் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நவ.1-ம் தேதி மது பாட்டில் விலையுடன் கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல மேல் வரியாக ரூ.10 சேர்த்து வசூலிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தனியாக காலி பாட்டில் திட்டத்துக்கு பணம் வசூலிக்ககூடாது. காலி பாட்டில்களை திரும்ப பெற தானியங்கி இயந்தரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதுவரை காலி பாட்டில்களை திருப்பிக் கொடுப்போரிடம் ரூ.10-ஐ திருப்பி தர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.