தமிழகம்

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 7 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: அரக்கோணம் யார்​டில் பொறி​யியல் பணி நடை​பெற உள்​ள​தால், சென்னை - அரக்கோணம் மின்​சார ரயில் உட்பட 7 மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, திருத்​தணி - அரக்​கோணத்​துக்கு வரும் 19 முதல் 25-ம் தேதி வரை இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், மறு​மார்க்​க​மாக, அரக்​கோணம் - திருத்​தணிக்கு வரும் 20 முதல் 26-ம் தேதி வரை அதி​காலை 4, 5 மணிக்கு இயக்​கப்​படும் 4 மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படும்.

பகுதி ரத்து

சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணத்​துக்கு வரும் 20 முதல் 25-ம் தேதி வரை காலை 11, இரவு 10.55 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில்​கள், திரு​வாலங்​காடு - அரக்​கோணம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படும்.

திருத்​தணி - சென்னை சென்ட்​ரலுக்கு வரும் 20 முதல் ஏப்​.25-ம் தேதி வரை நண்​பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்​டிய மின்​சார ரயில், திருத்​தணி - திரு​வாலங்​காடு இடையே பகுதி ரத்து செய்​யப்​படும்.

இந்த ரயில் திரு​வாலங்​காடு முதல் சென்னை சென்ட்​ரல் வரை இயக்​கப்​படும்.இத்​தகவல், சென்னை ரயில்வே கோட்ட செய்​திக் குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT