தமிழகம்

பிப்.28-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக வெளியான செய்​திக்​குறிப்பு:

காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி வலு​விழந்​தது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஓரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தென் தமிழகம் மற்​றும் மேற்​கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்​யும். மார்ச் 1 முதல் 3 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.

          

சென்​னை, செங்​கை, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலத்தில் இன்​றும் நாளை​யும் லேசான பனிமூட்​டம் காணப்​படும்.

SCROLL FOR NEXT