தமிழகம்

தமிழகத்தில் பிப். 6-ம் தேதி வரை மிதமாக மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: லட்​சத்​தீவு, கேரளா மற்​றும் அதையொட்​டிய தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது.

          

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (பிப்​.1) ஓரிரு இடங்​களிலும், 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களி​லும், 3-ம் தேதி கடலோர மாவட்​டங்​களி​லும், 4-ம் தேதி தமிழகத்​தில் சில இடங்​களி​லும், 5-ம் தேதி ஓரிரு இடங்​களி​லும், 6-ம் தேதி தென் தமிழகம் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும்.

கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​ட​மும் ஈரோடு, சேலம், நாமக்​கல், திருச்​சி, கரூர் மாவட்​டங்​களில் லேசான பனிமூட்​ட​மும் காணப்​படும். வரும் 2, 3, 4-ம் தேதி​களில் கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்டை மற்றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​டம் காணப்​படும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 30 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 22 செல்​சி​யஸ் அளவில் இருக்​கும்.

தமிழகத்​தில் ஜன. 31-ம் தேதி (நேற்​று) காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் திருத்​தணி​யில் 16.5 டிகிரி செல்சியஸ், மலைப் பகு​தி​யான ஊட்​டி​யில் 6.4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வானது.

SCROLL FOR NEXT