சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று (டிச. 24) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யும்.
அதேபோல, வரும் 27-ம் தேதி சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை நேரத்தில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.
தமிழகம், புதுச்சேரியில் 27-ம் தேதி வரை சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்.