தமிழகம்

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு கடலோர கேரளப் பகு​திகளின் மேல் வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது. இந்த சுழற்​சி​யில் இருந்து தெற்கு உள் கர்​நாடகா வரை காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதனால் கோவை, திருநெல்​வேலி மாவட்ட மலைப் பகு​தி​கள், நீல​கிரி, தேனி, தென்​காசி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்​டங்​களில் இன்று (அக்​.9) இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT