சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குமரிக்கடலில் இருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதுதவிர, தெற்கு கேரளம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, நவ.25 நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள் ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் 25-ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.