தமிழகம்

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2087 கோடி நிலுவை

ஊரக வளர்ச்சித் துறை தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ம​காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்பு திட்​டத்​தின் கீழ் தமிழக அரசுக்கு ரூ.2087 கோடி நிலு​வைத் தொகையை மத்​திய அரசு வழங்க வேண்​டும் என்று தமிழக ஊரக வளர்ச்​சித்​துறை தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் 2026-27 நிதி​யாண்​டில் கடந்த ஏப்.1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்பு திட்​டத்​தின் கீழ் 29.83 லட்​சம் குடும்​பங்​களை சேர்ந்த 31.47 லட்​சம் தொழிலா​ளர்​களுக்கு வேலை வழங்​கப்​பட்​டு, 3.22 கோடி மனித சக்தி நாட்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

இதற்​காக ரூ.1804 கோடி செல​விடப்​பட்​டுள்​ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வளர்ச்சி அடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்​றும் வாழ்​வா​தார திட்​டம் (விபி-ஜி ராம் ஜி) தமிழகத்​தில் செயல்​படுத்​தப்​படு​கிறது.

இந்த புதிய திட்​டத்​தின் கீழ் நிதி பங்​கீடு மத்​திய மற்​றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்​தில் பகிர்ந்​தளிக்​கப்​படும். இத்​திட்​டத்​தின் கீழ் 81.39 லட்​சம் குடும்​பங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 103.18 லட்​சம் தனி நபர் தொழிலா​ளர்​களுக்கு வேலை அட்​டைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இதில் 1,38,314 மாற்​றுத் திற​னாளி​கள், 581 திருநங்​கைகள் உள்​ளடங்​கு​வர். ஜூலை 25-ம் தேதி நில​வரப்​படி 26.75 லட்​சம் மனித சக்தி நாட்​கள் உருவாக்​கப்​பட்​டுள்​ளன.

மாநிலத்​தில் உரு​வாக்​கப்​பட்ட மொத்த மனித சக்தி நாட்​களில் 87.08 சதவீதம் பெண்​கள், 29.69 சதவீதம் எஸ்​சி, எஸ்டி குடுங்​களை சேர்ந்த பயனாளி​களால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் தகவல் அறி​யும் உரிமை சட்ட ஆர்​வலர் ஒரு​வர், தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் கீழ் கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகத்​துக்கு மத்​திய அரசு வழங்க வேண்​டிய நிலு​வைத் தொகை விவரத்தை கேட்டிருந்தார்.

அதற்​கு, ரூ.2087 கோடி மத்​திய அரசிட​மிருந்து வர வேண்டி இருப்​ப​தாக ஊரக வளர்ச்​சித்​துறை பதில்​ அளித்​துள்​ளது.

SCROLL FOR NEXT