ராமேசுவரம்: தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவரது ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஊர் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி விமரிசையாக கொண்டாடினர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். முன்னதாக பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக ஜோசப் விஜய்யின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஊர் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேளம் இசைத்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.