தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
Updated on
2 min read

மதுரை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி காரண​மாக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பதவி விலக அண்​ணா​மலை ஆதர​வாளர்​கள் குரல் எழுப்​பத் தொடங்கி உள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்து 27 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட்​டது. இதில் உதகை தொகு​தி​யில் மட்​டும் பாஜக வேட்​பாளர் 976 வாக்​கு​கள் வித்தியாசத்தில் வெற்​றி​பெற்​றார். சாத்​தூரில் போட்​டி​யிட்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட அனை​வரும் தோல்​வியைத் தழு​வினர்.

இந்​தத் தேர்​தலில் பாஜக 14 லட்சத்து 67,024 வாக்​கு​களைப் பெற்று 2.97 சதவீத வாக்​கு​களைப் பெற்​றுள்​ளது. கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக தனித்​துப் போட்​டி​யிட்டு 11.24 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. இந்​தத் தேர்​தலில் பெரிய கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்​தும் வாக்கு சதவீதம் கணிச​மாகக் குறைந்​துள்​ளது.

தமிழக பாஜக கூட்​டுறவு பிரிவுத் தலை​வர் மகா சுசீந்​திரன் படத்​துடன், ‘சாணக்​கியர் சறுக்​கி​னாரோ என்ற தலைப்​பிலான அறிக்கை பாஜக​வில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த அறிக்கை நயி​னார் நாகேந்​திரனை குறை​கூறும் வகை​யிலும், அண்​ணா​மலை​யைப் பாராட்​டும் வகை​யிலும் அமைந்​துள்​ளது.

அந்த அறிக்கையில் கூறப்​பட்​டிருந்​த​தாவது: பாஜக​வின் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​களின் உழைப்பு 2026 தேர்​தலில் அடை​யாளம் இல்​லாமல் காற்​றில் கரைந்​துள்​ளது. தமிழகத்​தில் பாஜக​வின் 3 சதவீத வாக்கு வங்கி 2021-ல் 18 சதவீத​மாக உயர்ந்து இரு பெரும் திரா​விட கட்​சிகளுக்கு சவாலாக உயர்ந்​தோம். சுயநல​வா​தி​கள் கருத்​தைக் கேட்டு கட்​சியை வளர்த்த ‘கோபுரக் கலசத்​தை’ குழி​யில் தள்​ளி​விட்டு பிற இயக்​கத்​தின் ‘காகத்தை கழுகு’ என நினைத்து சாணக்​கியர் சறுக்​கி​னாரோ என மனம் வருந்​துகிறது.

இந்த வருத்​தம் என்​னால் ஏற்​பட்​டது என உணர்ந்​தால், பாஜக​வின் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​களின் பாதங்​களில் விழுந்து மன்​னிப்​புக் கேட்டு நானும் என் தலை​மையி​லான குழு​வும் அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்து விடை​பெறுகிறோம் என தோல்​வியை ஒப்​புக்​கொண்​டிருப்​போம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த பரபரப்பு அடங்​கு​வதற்​குள் பாஜக​வின் வாக்கு வங்​கியை 12 சதவீதத்​தில் இருந்து 3 சதவீத​மாக குறைந்​ததற்​குப் பொறுப்​பேற்று நயி​னார் நாகேந்​திரன், தமிழிசை, எல்​.​முரு​கன், வானதி சீனி​வாசன் ஆகிய 4 பேரும் கட்​சியி​லிருந்து வில​கு​வ​தாக நயி​னார் நாகேந்​திரன் கையெழுத்​தில் கடிதம் வெளி​யான​தால் மேலும் பரபரப்பு எழுந்​துள்​ளது.

இந்​தக் கடிதம் போலி​யானது என போலீ​ஸில் பாஜக சார்​பில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் அந்​தக் கடிதம் சமூக வலை தளங்​களில் பரப்​பப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து பாஜக​வினர் கூறியதாவது: அண்​ணா​மலை தலை​வ​ராக இருந்​த​போது கட்சி வேக​மாக வளர்ந்​தது. நயி​னார் நாகேந்​திரன் தலை​வ​ரானதும் பாஜக அதி​முக​வின் ஒரு கிளை அமைப்​பு​போல் மாறி​விட்​டது. வேறு கட்​சிகளில் இருந்து குறிப்​பாக திரா​விடக் கட்​சிகளில் இருந்து வந்​தோருக்கு கட்​சி​யில் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டது.

அண்​ணா​மலை எதிர்ப்பு என்ற ஒற்​றைக் காரணத்​துக்காக தமிழிசை, எல்​.​முரு​கன், வானதி சீனி​வாசன் ஆகியோர் நயி​னார் நாகேந்​திரனுடன் இணைந்து செயல்​பட்​டனர். அனைத்​துத் தொகு​தி​களி​லும் பாஜக பின்​னுக்​குத் தள்​ளப்​பட்​டது. இந்த படு​தோல்விக்கு நயி​னார் நாகேந்​திரன் பொறுப்​பேற்க வேண்​டும். மேலிடம் அவரை தலை​வர் பதவியி​லிருந்து மாற்றி புதிய தலை​வரை நியமிக்க வேண்​டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in