படம்: எல்.சீனிவாசன்
வாகன விதிமீறலைக் கண்காணிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் மெரினா காமராஜர் சாலையில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய நவீன சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இருசக்கர வாகனத்தில் 3 அல்லது அதற்கு மேல் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் செல்வோர் என போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து போலீஸார் சாலையோரம் நின்று அபராதம் விதிக்கின்றனர்.
மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அதில் பதிவாகும் காட்சிகளை காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறும் கண்காணித்து அபராதம் விதிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கூடுதலாக மெரினா காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகிலும், கண்ணகி சிலை அருகிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் இயங்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போக்குவரத்து போலீஸாரால் கண்காணிக்க முடியும். போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை, காம ராஜர் சாலையில் முதல்வர், நீதிபதிகள் மற்றும் அமைச்சர் கள், உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் சென்று வருகின் றன. மேலும்,கடற்கரையை ரசிக்க பொதுமக்களும் அதிக அளவில் திரள்கின்றனர்.
எனவே, அனைத்து தரப்பினருக் கும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில், தற்போது பொருத்தப்பட் போலீஸாருக்கு உதவியாக இருக்கும் என காவல் அதிகாரி கள் தெரிவித்தனர். டுள்ள அதிநவீன கேமராக்கள் போலீஸாருக்கு உதவியாக இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.