தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மனைவி பொற்கொடியிடம் 2 மணி நேரம் சிபிஐ விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் தகவல்​களை திரட்​டும் நோக்​கத்​தில் அவரது மனை​யி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று 2 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் முன்​னாள் தமிழக தலை​வர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்​பூரில் உள்ள அவரது வீட்​டுக்கு அரு​கில் வெட்டி படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் சென்னை செம்​பி​யம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, பலரை கைது செய்து குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​திருந்​தனர்.

எனினும், வழக்​கின் பின்​னணி​யில் உள்ள சதித்​திட்​டம் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​பட​வில்லை என ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி உள்​ளிட்​டோர் கோரிக்கை விடுத்​தனர்.

இதையடுத்​து, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் வழக்கு சிபிஐ விசா​ரணைக்கு அண்​மை​யில் மாற்​றப்​பட்​டது. கடந்த 6-ம் தேதி சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது.

இந்​நிலை​யில், ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சுமார் 2 மணி நேரம், அவரது வீட்​டில் விசா​ரணை நடத்​தினர். வழக்கு தொடர்​பாக அவரிடம் முக்​கிய தகவல்​கள் மற்​றும் ஆவணங்​கள் குறித்து அதி​காரி​கள் கேட்​டறிந்​த​தாக கூறப்​படு​கிறது.

மேலும், கொலைக்​கான பின்​னணி மற்​றும் சதித்​திட்​டம் தொடர்​பாக​வும் விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ஆம்​ஸ்ட்​ராங் கொலை நடந்த இடத்​தி​லும் சிபிஐ அதி​காரி​கள் நேரில் ஆய்வு செய்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT