ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு 6 மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு 6 மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆதி திரா​விடர் மற்​றும் பழங்குடியினர் ஆணை​யத் தலை​வரை கடந்த 6 மாதங்​களாக நியமிக்​காதது ஏன்? என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக திரு​வண்​ணா​மலை மாவட்​டம், உச்​சிமலை குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் சி.பொன்​னு​சாமி, சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலனுக்​காக​வும், அவர்​களின் உரிமை​களைப் பாது​காக்​க​வும், வன்​கொடுமை​களைத் தடுக்​க​வும் தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது.

இதற்​கான சட்​டம் 2021-ம் ஆண்டு இயற்​றப்​பட்​டது. இந்த ஆணை​யத்​தின் தலை​வ​ராக ஓய்​வு​பெற்ற உயர்​நீ​தி​மன்ற நீதிபதி ஒரு​வர் நியமிக்​கப்பட வேண்​டும் என்​பது விதி​யாகும். அதன்​படி, ஓய்​வு​பெற்ற நீதிபதி பி.ஆர்​.சிவகு​மார் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்டு 3 ஆண்​டு​கள் பணி​யாற்​றி​னார்.

அவருக்​குப் பிறகு ஓய்​வு​பெற்ற நீதிபதி டாக்​டர் எஸ்​.தமிழ்​வாணன் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். அவர் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கால​மா​னார்.

அவர் மறைந்த பிறகு, கடந்த 6 மாதங்​களாக ஆணை​யத்​தின் தலை​வர் பதவி காலி​யாக உள்​ளது. இதனால் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்கு எதி​ரான வன்​கொடுமை​கள், உரிமை​கள் பறிப்பு தொடர்​பான புகார்​களை விசா​ரித்​தல், அரசுக்கு பரிந்​துரைகளை வழங்​குதல், ஆராய்ச்சி மற்​றும் ஆய்​வு​களை மேற்​கொள்​ளுதல், சட்ட அமலாக்​கத்தை கண்​காணித்​தல் மற்​றும் அரசு சாரா அமைப்​பு​களின் பணி​களை ஊக்​கு​வித்​தல் போன்ற பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் தமிழகத்​தில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​களுக்கு எதி​ராக பள்​ளி​களில் சில விரும்​பத்​த​காத சம்​பவங்​கள் அவ்​வப்​போது நடை​பெறுகின்​றன.

இவற்றை கவனத்​தில் கொண்டு ஆணை​யத்​தின் தலை​வர் பதவியை நிரப்ப வேண்​டும் என தமிழக அரசின் தலை​மைச் செயலர் மற்​றும் ஆதி திரா​விடர், பழங்​குடி​யினர் நலத்​துறைச் செயலருக்கு கடந்த ஜூலை 24-ம்​தேதி மனு அனுப்​பினேன்.

ஆனால், இது​வரை எந்த பதி​லும் இல்​லை. எனவே, ஆதி​தி​ரா​விடர் சமூகத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற உயர்​நீ​தி​மன்ற நீதிப​தியை ஆணை​யத்​தின் தலை​வ​ராக உடனடி​யாக நியமிக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அவர் மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு 6 மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அமைச்சர் மரிய வில்சனிடம் விசாரணை நடத்த வேண்டும்: அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in