தமிழகம்

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் சிபிஐ ஆய்வு: முதல்கட்ட விசாரணை தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆர்ம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு தொடர்​பாக சம்பவ இடத்​துக்கே சென்று சிபிஐ அதி​காரி​கள் நேரில் ஆய்வு செய்​தனர். அந்​தவகை​யில் ஆம்​ஸ்ட்​ராங்க் கொலை வழக்​கின் முதற்​கட்ட விசா​ரணை தீவிரமடைந்​துள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் தமிழக முன்​னாள் தலை​வர் கே. ஆர்ம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கின் விசா​ரணையை சிபிஐ கையில் எடுத்து ஒரு வாரம் முடிவடைந்​துள்ள நிலை​யில், அதி​காரி​கள் முதற்​கட்ட விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

இதன் ஒரு பகு​தி​யாக, சென்னை பெரம்​பூரில் உள்ள வேணுகோ​பால் தெரு​வில் ஆர்ம்​ஸ்ட்​ராங் வெட்​டிக் கொல்​லப்​பட்ட இடத்​துக்கு சிபிஐ அதி​காரி​கள் நேற்று முன் தினம் நேரில் சென்​றனர்.

டிஐஜி ரகு​ராம​ ராஜன் தலை​மையி​லான மூன்று அதி​காரி​கள் கொண்ட குழு​வினர், ஆர்ம்​ஸ்ட்​ராங் கொலை செய்​யப்​பட்ட போது அவர் கட்​டிக்கொண்​டிருந்த வீட்​டைப் பார்​வை​யிட்​டதுடன், அங்கு நடந்த சம்​பவங்​களைக் காட்​சிகளாக மறு உரு​வாக்​கம் செய்து தீவிர​மாக ஆய்வு செய்​தனர்.

கொலை சம்​பவம் எவ்​வாறு அரங்​கேறியது என்​பது குறித்து அதி​காரி​கள் விரி​வாகப் பதிவு செய்து கொண்​டனர். இந்த ஆய்​வின் போது, ஆர்ம்​ஸ்ட்​ராங் கொலை செய்​யப்​பட்ட 2024 ஜூலை 5-ம் தேதி செம்​பி​யம் காவல் நிலைய ஆய்​வாள​ராக​வும், வழக்​கின் முந்​தைய விசா​ரணை அதி​காரி​யாக​வும் இருந்த சிரஞ்​சீ​வி​யும் உடனிருந்​தார்.

ஆர்ம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரரும், கொலையை நேரில் பார்த்த சாட்​சி​யு​மான வீரமணி அளித்த புகாரின் அடிப்​படை​யில், செம்​பி​யம் காவல்​துறை​யின​ரால் பதிவு செய்​யப்​பட்ட அசல் முதல் தகவல் அறிக்​கை​யை, சென்னை சிபிஐ சிறப்​புப் பிரிவு தற்​போது மீண்​டும் பதிவு செய்து தனது அதி​காரப்​பூர்வ விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது.

முன்​ன​தாக, கடந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் சென்னை உயர் நீதி​மன்​றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்​தர​விட்​டதுடன், சென்னை காவல்​துறை தாக்​கல் செய்​திருந்த குற்​றப்​பத்​திரி​கை​யை​யும் ரத்து செய்​தது.

இந்த உத்​தரவை எதிர்த்து சென்னை காவல் ஆணை​யர் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. பின்​னர், அந்த மனுவை காவல்​துறை திரும்​பப் பெற்​றதைத் தொடர்ந்​து, உச்ச நீதி​மன்​றம் சிபிஐ விசா​ரணைக்கு முழு அனு​மதி அளித்​தது. இதனைத் தொடர்ந்​து, சிபிஐ அதி​காரி​கள் இந்த வழக்​கைப் புதி​ய கோணத்​தில்​ முழு​வீச்​சில்​ வி​சா​ரிக்​கத்​ தொடங்​கி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT