தமிழகம்

கோவை மாணவர் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி. விசாரணை தொடக்கம்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் பள்ளி மாணவர் அகிலன் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சக மாணவர்கள் சாதிய கண்ணோட்டத்தில் அணுகியதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் இரு மாணவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அகிலன் தற்கொலை தொடர்பான வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி கோவை மேற்கு மண்டல எஸ்.பி. தேவி நேற்று பீளமேட்டில் மாணவர் தற்கொலை செய்த இடம், படித்த பள்ளி, அவர் தொடர்பான இடங்கள் ஆகியவற்றுக்கு நேரில் சென்று விசாரித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT