தமிழகம்

காவிரி நீர் திறப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​கா​விரி​யில் விகி​தாச்​சார அடிப்​படை​யில் கர்​நாடக அரசு நீர் திறப்​பதை உறுதி செய்​ய​வும், பற்​றாக்​குறை நீரை திறக்க உத்​தர​விடக் கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு அவசர மனு தாக்​கல் செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது : தமிழகத்​துக்கு இந்த ஆண்டு மிக​வும் நெருக்​கடி​யான நீர் ஆண்​டாக உள்​ளது, எனவே, கர்​நாட​கா​வில் இருந்து பிலிகுண்​டுலு​வில் தமிழகத்​துக்கு விகி​தா​சார அடிப்​படை​யில் தண்​ணீர் கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில் நீரை கர்​நாடகா வழங்க உத்​தர​விட வேண்​டும். மேலும், கர்​நாடக அணை​களில் போதிய நீர்​வரத்து இருக்​கும்​போதோ அல்​லது அணை​கள் நிரம்பி வழி​யும்​போது மட்​டுமே காவிரி​யில் தமிழகத்​துக்கு தண்​ணீர் திறந்து விடு​வதை அந்த மாநிலம் வாடிக்​கை​யாக கொண்​டுள்​ளது. இது நீர் விவ​காரத்​தில் தமிழகத்​துக்கு ஒரு நிச்​சயமற்ற தன்​மையை ஏற்​படுத்தி உள்​ளது.

எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தால் கடந்த ஜூலை 30, ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 25 மற்​றும் செப்​டம்​பர் 8 ஆகிய தேதி​களில் பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வு​களை கர்​நாடக அரசு பின்​பற்​று​வதை உறுதி செய்ய வேண்​டும். மேலும், நடப்பு 2026-27 பாசன ஆண்​டில் விகி​தாச்​சார பங்​கீட்​டின்​படி நீர் திறந்​து​விடப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT