கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ.75 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் தேர்​தல் தொடர்​பான சோதனை​யில் இது​வரை ரூ.75 கோடி மதிப்​பில் ரொக்​கம் மற்​றும் பரிசு பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை வெளிப்​படைத் தன்​மை​யுடன் நடத்த, தமிழகத்​தி​லுள்ள 234 தொகு​தி​களுக்​கும் 136 பொதுப் பார்​வை​யாளர்​கள், 40 காவல் பார்​வை​யாளர்​கள் மற்​றும் 151 செல​வினப் பார்​வை​யாளர்​களை இந்திய தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. அவர்​களை பொது​மக்​கள், அரசி​யல் கட்​சிகள் எளி​தில் தொடர்​பு​கொள்ள, அவர்​களின் தொடர்பு விவரங்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

          

தேர்​தல் செல​வினக் கண்​காணிப்பை உறுதி செய்​யும் வித​மாக மாநிலம் முழு​வதும் கண்​காணிப்பு மற்​றும் அமலாக்​கக் குழுக்​கள் தீவிர​மாகப் பணி​யாற்றி வருகின்​றன. இந்​நிலை​யில். தமிழகம் முழு​வதும் நேற்​றைய (மார்ச் 21) நிலவரப்​படி, ரூ.23.74 கோடி ரொக்கம், ரூ.51 லட்​சம் மதிப்​பில் மது​பானங்​கள், ரூ.5.63 கோடி மதிப்​பில் போதைப்​பொருட்​கள், ரூ.23.1 கோடி மதிப்​பில் தங்​கம், வெள்ளி பொருட்​கள், ரூ.21.96 கோடி மதிப்​பில் இலவச​மாக வழங்க கொண்டு செல்​லப்​பட்ட இதர பொருட்​கள் என மொத்​தம் ரூ.75 கோடி மதிப்​பில் ரொக்​கம் மற்​றும் பொருட்​கள் பறிமுதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

வேட்​பாளர்​கள் மற்​றும் அரசி​யல் கட்​சிகள் இணை​ய​வழி வேட்​புமனு தாக்​கல்,வேட்​புமனு சமர்ப்​பிப்​ப​தற்​கான நேர ஒதுக்​கீடு​களை முன்​ப​திவு செய்​தல், பொதுக் கூட்​டங்​கள், பேரணி​கள் உள்ளிட்ட அனு​ம​தி​களுக்​கான விண்​ணப்​பங்​கள் போன்ற தேர்​தல் நடை​முறை​களைப் பின்​பற்​று​வதற்கு வசதி​யளிக்​கும் ஒரு விரி​வான டிஜிட்​டல் தளத்தை தேர்​தல் ஆணை​யத்​தின் சுவிதா இணை​யதளம் (http://suvidha.ecl.gov.in/) வழங்கு​கிறது.

விண்​ணப்​ப​தா​ரர்​கள் இந்த இணை​யதளத்​தில் செயல்​முறையை நிறைவு செய்த பிறகு, சமர்ப்​பிக்​கப்​பட்ட விண்​ணப்​பத்​தின் அச்​சுப் பிர​தியை எடுத்​து, தேவை​யான ஆவணங்​களு​டன் தேர்​தல் அதி​காரி​யிடம் நேரில் சமர்ப்​பிக்க வேண்​டும். இந்த இணை​யதளம் வழி​யாக இது​வரை 2,443 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT