தமிழகம்

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக திமுக, விசிக தொடர்ந்த வழக்குகள் முடித்துவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை / புதுடெல்லி: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) நடை​முறைப்​படுத்​தக் கூடாது என்று திமுக, விசிக, கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில், உச்ச நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்​கு​கள் முடித்து வைக்​கப்​பட்​டன.

நாடு முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை நடை​முறைப்​படுத்த இந்​திய தேர்​தல் ஆணை​யம் முடிவு செய்​தது. அதன்​படி, பிஹாரைத் தொடர்ந்​து, தமிழ்​நாடு, கேரளா, மேற்​கு​வங்​கம் உள்​ளிட்ட மாநிலங்​களில் தொடங்​கப்​பட்​டன.

ஆனால், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் சூழலில் அவசர அவசர​மாக எஸ்​ஐஆர் நடை​முறையை மேற்​கொள்​ளக் ​கூ​டாது, இதை செயல்​படுத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதி​காரம் இல்லை என்று கூறி, திமுக, விசிக, கம்​யூனிஸ்ட்​கள், காங்​கிரஸ் உள்பட தமிழகத்​தைச் சேர்ந்த பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பரில் வழக்கு தொடுத்​தன.

இந்த வழக்​கு​கள், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழகத்​தைச் சேர்ந்த அரசி​யல் கட்​சிகள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள், அரசி​யலமைப்​புச் சட்​டம் தந்த அதி​காரங்​களை மீறி தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வ​தா​வும், தகுதி உள்​ளவர்​கள் நீக்​கப்​படு​வதற்​கும், தகு​தி​யற்​றோர் சேர்க்​கப்​படு​வதற்​கும் ஏது​வான வகை​யில், இந்த நடை​முறை அமைந்​துள்​ள​தாக வாதிடப்​பட்​டது.

மேலும், தமிழகத்​தில் லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​கள் தங்​களது வாக்​குரிமையை இழக்​கும் அபா​யம் உள்​ள​தால், தமிழகத்​தில் எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்கு தடை விதிக்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தப்​பட்​டது.

ஆனால், உச்ச நீதி​மன்​றம், எஸ்​ஐஆர் நடவடிக்​கையை மேற்​கொள்ள தடை விதிக்​காததோடு, இதனால் தகு​தி​யுள்ள நபர்​கள் வாக்​குரிமையை இழக்​கும்​பட்​சத்​தில் அவர்​கள் நீதி​மன்​றத்தை அணுகலாம் என்​றும், வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற ஆதார் அட்​டையை ஒரு கூடு​தல் ஆவண​மாக எடுத்​துக்​கொள்ள வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டது.

இதையடுத்து, தமிழகத்​தில் எஸ்ஐஆர் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. அதன்​மூலம், சுமார் 74 லட்​சம் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, புதிய வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

அதனடிப்​படை​யில், தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலும் நடை​பெற்று முடிந்த நிலை​யில், எஸ்​ஐஆர் தொடர்​பான வழக்​கு, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக்​ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது அப்​போது தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், மனு​தா​ரர்​கள் தரப்பு வழக்​கறிஞர்​களை நோக்​கி, ‘‘இந்த விவ​காரத்​தில் தற்​போது வேறு ஏதேனும் விசா​ரிக்க வேண்​டியது உள்​ள​தா?’’ என வின​வி​னார் அதற்கு மனு​தா​ரர்​கள் தரப்பு வழக்​கறிஞர்​கள், ‘‘தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​கள் நிறைவடைந்​து​விட்​டன, தேர்​தலும் நடந்து முடிந்து விட்​டது.

எனவே இந்த மனு​வில் கூடு​தலாக இப்​போது விசா​ரிக்க வேண்​டிய அம்​சம் இல்​லை’’ என தெரி​வித்​தனர் இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள், தமிழகத்​தில் எஸ்​ஐஆர் நடை​முறைக்கு எதி​ராக திமுக, விசிக கம்​யூனிஸ்ட் கட்​சிகள் உள்​ளிட்​டவை தொடர்ந்த வழக்​கு​களை முடித்து​வைத்து உத்​தர​விட்​டனர்.

அப்​போது, வழக்​கறிஞர் பிரசன்னா என்​பவர், ‘‘எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யில் பாதிக்​கப்​பட்ட தனி நபர்​கள் நீதி​மன்​றத்தை அணுகு​வதற்கு அனு​ம​திக்க வேண்​டும்’’ என கோரிக்கை வைத்​தார் அதை ஏற்​றுக்​கொண்ட தலைமை நீதிபதி அமர்​வு, ‘‘எஸ்ஐஆர் தொடர்​பாக தனி நபர்​களுக்கு ஏதேனும் நிவாரணம் பெற வேண்​டும் என்​றால்​ நீதி​மன்​றத்​தை அணுகலாம்​’’ என அனு​ம​தி வழங்​கி உத்​தரவிட்டது.

SCROLL FOR NEXT