தமிழகம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ்​ பாண்டியன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவில் நில​விய உள்​கட்சி பிரச்சினை காரண​மாக கடந்த 2022 ஜூலை 11 அன்று நடந்த அதி​முக பொதுக்​குழு மற்​றும் அதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​களை எதிர்த்​தும், தங்​களை அதி​முக​வில் இருந்து நீக்​கியதை எதிர்த்​தும் முன்​னாள் முதல்​வ​ர் ஓ.பன்​னீர்​செல்​வம், அவரது ஆதர​வாளர்​களான வைத்​திலிங்​கம், மனோஜ்​ பாண்​டியன், ஜேசிடி.

பிர​பாகர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களைத் தொடர்ந்​தனர். இந்த வழக்​கு​கள் நிலு​வை​யில் இருந்து வரும் நிலை​யில், தற்​போது ஓ.பன்​னீர்​செல்​வம், வைத்​திலிங்​கம், மனோஜ்​பாண்​டியன் ஆகியோர் திமுக​வில் இணைந்து எம்​எல்​ஏ-க்​களாக உள்ளனர்.

இந்நிலை​யில், அதிமுக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்து தாங்​கள் தொடர்ந்​திருந்த வழக்​கு​களை வாபஸ் பெற அனு​மதி கோரி அவர்கள் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​களைத் தாக்​கல் செய்​தனர்.

இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிபதி கே.குமரேஷ்​பாபு, முன்​னாள் முதல்​வ​ரான ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோர் தரப்​பில் தொடரப்​பட்​டிருந்த உரிமை​யியல் வழக்​கு​களை வாபஸ் பெற அனு​ம​தித்​து, வழக்​கு​களை முடித்து வைத்து உத்​தர​விட்​டார்.

இதே​போல அதி​முக பெயர், கொடி, சின்​னம் ஆகிய​வற்றை ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்பு பயன்​படுத்த தடை விதிக்​கக்​கோரி அதி​முக பொதுச் செய​லா​ள​ரான பழனி​சாமி தொடர்ந்​திருந்த வழக்​கை​யும் வாபஸ் பெற அனு​மதி கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அந்த மனுவை​யும் ஏற்ற நீதிப​தி, அதை​யும் வாபஸ் பெற அனு​ம​தித்து முடித்​து​வைத்​தார். மேலும், ஜேசிடி பிர​பாகர் தற்​போது தவெக​வில் இணைந்து சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக பதவி வகிக்​கும் நிலை​யில் அவரும் தனது தரப்​பில் அதிமுக பொதுக்​குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனு​மதி கோரி​யிருந்​தார். அந்த மனுவை​யும் ஏற்ற நீதிப​தி, வழக்கை வாபஸ் பெற அனு​ம​தித்​து முடித்​து வைத்​தார்​.

SCROLL FOR NEXT