தமிழகம்

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த மே 10 முதல் ஜூலை 31-ம் தேதி வரை பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 பேர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் காக்ரோச் ஜனதா கட்சியினர் (சிஜேபி) மற்றும் மாணவர்கள் தொடர்போராட்டங்களை டெல்லியில் முன்னெடுத்தனர். அந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறை பலரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதையேற்று வழக்குகளை அரசு திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT