தமிழகம்

3 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: தவெக​வில் இணைந்த 3 அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னா​மாவை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் 108 தொகு​தி​களில் வெற்றி பெற்று காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் மற்​றும் விடு​தலை சிறுத்​தைகள் கட்​சிகளின் ஆதர​வுடன் ஆட்​சி​யமைத்​தது.

இந்​நிலை​யில் கடந்த மே 13 அன்று நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது அதி​முக முன்​னாள் அமைச்​சர்​களான எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

அவர்​கள் மீது கட்​சித்​தாவல் தடைச்​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கக்​கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தரப்​பில் சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் மனு அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் அந்த 25 பேரில் அதி​முக எம்​எல்​ஏ-க்​களான மது​ராந்​தகம் மரகதம் குமர​வேல், பெருந்​துறை ஜெயக்​கு​மார், தாராபுரம் சத்​தி​ய​பாமா ஆகியோர் தங்​களது எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர்.

அவர்​களின் ராஜி​னாமா கடிதங்​களை பேர​வைத் தலை​வர் ஏற்​றதை அடுத்​து, அது தொடர்​பான அறி​விப்பு அரசிதழிலும் வெளி​யிடப்​பட்​டது. தகுதி நீக்க நடவடிக்கை நிலு​வை​யில் உள்ள நிலை​யில் அதிமுக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக்​கொண்​டது சட்​டப்​படி தவறு எனக்​கூறி தேசிய மக்​கள் சக்தி கட்​சி​யின் தலை​வ​ரான வழக்​கறிஞர் எம்​.எல்​.ரவி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

அதில், ``கட்சி கொறடா உத்​தரவை மீறி சட்​டப்​பேர​வை​யில் வாக்​களித்​த​தால் தகுதி நீக்​கம் தொடர்​பான நடவடிக்கை நிலு​வை​யில் இருந்து வரும் நிலை​யில், அதைத் தவிர்க்​கும் வித​மாக சம்​பந்​தப்​பட்ட எம்​எல்ஏ தனது பதவியை ராஜி​னாமா செய்ய முடி​யுமா என்​பது குறித்​தும், அதை ஏற்க முடி​யுமா என்​பது குறித்​தும் அரசி​யல் சாசன சட்​டரீ​தி​யாக கேள்வி எழுந்​துள்​ளது.

பேர​வைத் தலை​வர் சம்​பந்​தப்​பட்ட அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்​றுக்​கொண்​டது கட்​சித்​தாவல் தடைச்​சட்​டத்​தை​யும், மக்​கள் தீர்ப்​பை​யும் நீர்த்​துப்​போகச் செய்​யும் வகை​யில் உள்​ளது.

கட்​சித்​தாவல், ராஜி​னாமா காரண​மாக அடுத்​தடுத்து தேர்​தல்​கள் நடத்த வேண்​டி​யுள்​ள​தால் அரசுக்கு கூடு​தல் செலவு ஏற்​படும். எனவே 3 அதிமுக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்.

மேலும் அவர்​களை தகுதி நீக்​கம் செய்​யக்​கோரி அதி​முக தரப்​பில் அளிக்​கப்​பட்​டுள்ள மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பேர​வைத் தலை​வருக்கு உத்​தர​விட வேண்​டும்'' எனக் கோரி​யுள்​ளார். இந்த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

SCROLL FOR NEXT