சிங்கப்பெண் படையினருக்கு துப்பாக்கி: ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல்

ஐ.ஜி. பவானீஸ்வரி

ஐ.ஜி. பவானீஸ்வரி

Updated on
2 min read

சென்னை: ரோந்​துப் பணி​யில் ஈடு​படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்​படை​யினருக்கு தேவைப்​பட்​டால் துப்​பாக்கி வழங்​கப்​படும் என ஐ.ஜி. பவானீஸ்​வரி தெரி​வித்​தார்.

பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், கொண்​டு​வரப்​பட்ட `சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை'யை முதல்​வர் விஜய் நேற்று முன்​தினம் சென்​னை​யில் தொடங்கி வைத்​து​விட்​டார்.

இந்​நிலை​யில் இந்த சிறப்பு அதிரடிப்​படை​யின் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்ட ஐ.ஜி. பவானீஸ்​வரி, இப்​படை​யின் செயல்​பாடு​கள் மற்​றும் நோக்​கங்​கள் குறித்து நேற்று டிஜிபி அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களை துரித​மாகக் கையாள்​வதும், ஆபத்து காலங்​களில் விரைந்து செயல்​பட்டு அவர்​களைப் பாது​காப்​பதும் இந்த அதிநவீனப் படை​யின் முதன்மை நோக்​கம்.

இதற்​காக பொது இடங்​கள், பேருந்து நிலை​யம், அலு​வல​கம் உட்பட பல இடங்​களில் இந்த அதிரடிப்​படை போலீ​ஸார் ரோந்து செல்​வர். பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் எங்​கெல்​லாம் நடந்​துள்​ளது அல்​லது நடை​பெறலாம் என்ற விவரத்தை சேகரித்து அந்த இடங்​களில் மீண்​டும் குற்​றங்​கள் நிகழாத​வாறு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

இவர்​கள் காவல் துறை​யில் உள்ள பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், தன்​னார்​வலர்​கள் உள்​ளிட்ட பலருடன் ஒருங்​கிணைந்து பணி​யாற்​று​வார்​கள். மேலும் விழிப்​புணர்​வை​யும் ஏற்​படுத்​து​வார்​கள்.

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படைக்​காக ரூ.357 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. புதி​தாக 2,545 போலீ​ஸார் நியமிக்​கப்பட உள்​ளார்​கள். பெண்​களுக்கு பாது​காப்​பான இடம் தமிழகம் என்ற நிலை உரு​வாக்​கப்​படும்.

பெண்​களுக்கு உடல் அளவில் மட்​டும் கொடுமை நடப்​ப​தில்​லை. சமூக வலை​தளம் மற்​றும் மன ரீதி​யிலும் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடை​பெறுகின்​றன; அதை​யும் தடுக்க வேண்​டும்.

தமிழகம் முழு​வதும் 70 சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படைகள் அனுப்பப்பட்டுள்ளன. சென்​னை​யில் மட்டும் 12 தனிப்​படைகள் கண்​காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றன. இதே​போன்று மொத்​தம் 270 குழுக்​கள் உரு​வாக்​கப்​படும்.

சிங்கப்பெண் அதிரடிப்படையில் ஒரு திருநங்கையும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 100, 112, 1091 எண்​களுக்கு வரும் அவசர அழைப்​பு​களுக்​கும் சிங்​கப்​பெண் சிறப்பு படை​யினர் விரைந்து நடவடிக்கை மேற்​கொள்​வார்​கள்.

சீருடை​யில் மட்​டும் அல்​லாமல் சாதாரண உடை​யிலும் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படு​வார்​கள். சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை​யினருக்கு தற்​காப்​பு, எதிர் தாக்​குதல் உட்பட பல்​வேறு சிறப்​புப்பயிற்​சிகள் அளிக்​கப்​பட்​டுள்​ளன.

49 ட்ரோன்​கள்

புதி​தாக வரு​வோருக்​கும் பயிற்சி அளிக்​கப்​படும். துப்​பாக்​கியை இயக்​க​வும் பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது அவர்​களுக்கு துப்​பாக்கி தரப்படவில்லை; தேவைப்​பட்​டால் கொடுக்​கப்​படும். சிங்​கப்​பெண் சிறப்​புப் படை​யினர் அந்​தந்த மாவட்ட எஸ்​பி-​யின் கீழ் பணி​யாற்​று​வார்​கள்.

அவர்​களுக்கு வேறு பணி வழங்​கப்​ப​டாது. 49 ட்ரோன்​கள் வாங்​கப்பட உள்​ளன. போலீ​ஸார் நேரில் சென்று கண்​காணிக்க முடி​யாத இடங்​களில் இவை பயன்​படுத்​தப்​படும்.

பொது இடங்​களில் பெண்​களுக்கு ஏற்​படும் அச்​சுறுத்​தல்​களைத் தவிர்த்​து, அவர்​கள் எந்த நேரத்​தி​லும் அச்​சமின்றி பயணிக்​க​வும், வாழ​வும் ஓர் உறு​தி​யான பாது​காப்பை ஏற்​படுத்​திக் கொடுப்​ப​தே இப்​படை​யின்​ நோக்​கம்​. இவ்​வாறு பவானீஸ்​வரி கூறி​னார்​.

<div class="paragraphs"><p>ஐ.ஜி. பவானீஸ்வரி</p></div>
எஸ்எஸ்எல்சி துணை தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in