தமிழகம்

லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரி வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் லோக் ஆயுக்தா சட்​டத்தை தீவிர​மாக அமல்​படுத்த நடவடிக்கை எடுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசு 6 வாரத்​தில் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மத்​திய, மாநில அரசு அதி​காரி​கள், ஊழியர்​கள் மீதான ஊழல் புகார்​களை விசா​ரிக்​கும் நோக்​கில் லோக்​பால், லோக் ஆயுக்தா சட்​டத்தை மத்​திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு இயற்​றியது. இதன் அடிப்​படை​யில் தமிழகத்​தில் தமிழ்​நாடு லோக் ஆயுக்தா சட்​டம் கடந்த 2018-ம் ஆண்டு இயற்​றப்​பட்​டு, அதே ஆண்டு நவம்​பரில் அமலுக்கு வந்​தது.

இந்த சட்​டத்தை தமிழகத்​தில் தீவிர​மாக அமல்​படுத்த உத்​தர​விடக் கோரி தஞ்​சாவூரைச் சேர்ந்த வி.ஜீவகு​மார் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். அதில் அவர் கூறி​யிருந்​த​தாவது:

தமிழ்​நாடு லோக் ஆயுக்தா சட்​டம் தமிழகத்​தில் இன்​னும் தீவிர​மாக செயல்​படுத்​தப்பட​வில்​லை. மேலும், அரசின் துணைச் செயலர் அந்​தஸ்​தில் உள்ள அதி​காரியை தமிழக லோக் ஆயுக்தா செயல​ராக நியமிக்க வேண்​டும் என்று கூறி​யுள்ள நிலை​யில், ஓய்வு பெற்ற அல்​லது பணி​யில் உள்ள மாவட்ட நீதிப​தியை நியமிக்​கும் வகை​யில் விதி​களை திருத்தி கடந்த 2020-ல் அரசாணை பிறப்​பி்க்​கப்​பட்​டுள்​ளது. இது மத்​திய அரசின் சட்​டத்தை மீறும் செயல் என்​ப​தால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்முரு​கன் அமர்​வு, 6 வாரத்​தில் பதில் அளிக்​கு​மாறு அரசுக்கு உத்​தரவிட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தது.

SCROLL FOR NEXT