தமிழகம்

ரூ.8 ஆயிரம் கூப்பன்: 2 திமுகவினர் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: வண்​ணாரப்​பேட்​டை​யில் வாக்​காளர்​களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்​பன் விநி​யோகம் செய்​த​தாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வண்​ணாரப்​பேட்டை வீட்​டு​ வசதி வாரியக் குடி​யிருப்பு பகு​தி​யில் வாக்​காளர்​களுக்கு பரிசுப் பொருள்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக தகவல் கிடைத்த நிலை​யில், போலீ​ஸாரும், பறக்​கும் படை​யினரும் தீவிர கண்​காணிப்பில் ஈடு​பட்​டனர்.

அப்​போது சந்​தேகத்​துக்​குரிய வகை​யில் 2 பேர், அங்​குள்ள வீடு​களுக்​குள் சென்று வரு​வது தெரிந்​தது. இதையடுத்து போலீ​ஸார், அவர்​களைப் பிடித்து விசா​ரித்​தனர். அவர்​கள் வைத்​திருந்த பையை சோதனை​யிட்​ட​போது, ரூ.8 ஆயிரம் கூப்​பன்​கள் இருப்​பது தெரிந்​தது.

அதை போலீ​ஸார் உடனடி​யாக பறி​முதல் செய்​தனர். மேலும் அவர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. பிடிபட்ட இரு​வரும் திமுகவைச் சேர்ந்​தவர்​கள் என்​பதும், அந்த பகு​தி​யைச் சேர்ந்த வாக்​காளர்​களுக்கு ரூ.8 ஆயிரம் இல்​லத்​தரசி கூப்​பன் என்ற இலவச கூப்​பன் மாதிரி​களை விநி​யோகம் செய்​ததும் தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT